» Publishers, Monetize your RSS feeds with FeedShow: More infos (Show/Hide Ads)
நாங்கள் பயணம் செய்த பேருந்திலேயே புதுவை ‘சகோதரன்’ அமைப்பைச் சேர்ந்த ஐந்து அரவானிகளும் அவர்களுடன் இரண்டு ஆண்களும் வந்திருந்தனர். அங்கேயே தமிழ்க் கலாச்சார நாடகம் அரங்கேறத் தொடங் கியது. ஐந்தாறு கல்லூரி மாணவர்கள் அரவானிகளை கேலிசெய்தபடி வந்தனர். நான் கடைசி இருக்கையில் இருந்தேன். கூட்ட நெரிசலில் சிரிப்பொலி மாத்திரம் அவர்களிடமிருந்து வந்துகொண்டி யிருந்தது. செல்வக்குமாரி அரவானிகளுடன் அமர்ந்திருந்தார், அம்மாணவர்களிடம் பேசவும் அவர்களின் சீண்டல் குறைந்தது. தான் எழுதியுள்ள ஆய்வுக்கான குறிப்பைக் கொடுத்து படிக்க வைத்தார். பிறகு சத்தத்தைக் காணோம். விழுப்புரம் பழைய பேருந்து நிறுத்தத்தில் அவர்களும் மாணவர்களும் இறங்கிக் கொண்டனர். மாறி மாறி பறக்கும் முத்தங்களைக் கொடுத்துக் கொண்டனர். அதில் ஒருவன் பணத்தை அள்ளிகொடுக்க ஒருத்தி கட்டிபிடித்து முத்தம் தந்தாள். அவன் புதுவையில் ஏறியதிலிருந்தே தனது இளித்தவாயை மூடாமல் வந்தான்.
விழுப்புரம் பேருந்து நிறுத்தத்தில் ‘கூவாகம் பஸ் எங்க நிக்கும்’ என்று கேட்டதற்கு எல்லோரும் எங்களை வேற்றுக் கிரகவாசிகளைப் போல் பார்த்தனர். பின்னிருக்கையில் இருந்த அரவானிகளிடமிருந்து கைகொட்டலும் பாட்டொலியும் அந்த இறுக்கத்திலும் புழுக்கத்திலும் களைகட்டியது. பாட்டப் பாடு என்று ஆண்கள் அவர்களை வளைத்துக்கொண்டு கத்திக் கொண்டிருந்தனர். பணத்த கொடு பாடறேன் என்றனர். மீண்டும் பாடத் தொடங்கினர். புளி பானை மாதிரி அடைத்துகொண்டு 8.30 மணிக்கு கூவாகம் சேர்ந்தது. கூத்தாண்டவர் கோயில் திருவிழா அதன் சடங்குகள் பற்றி பொதுவாக எல்லோரும் அறித்த ஒன்றுதான். தமிழ் சமுக ஒழுக்கத்தைப் பற்றியும் புனித குடும்ப உறவைப்பற்றியும் வெளி உலகில் மார்த்தட்டிக்கொள்ளும் அரசியல்வாதிகளும் மதவாதிகளும் ஒருபுறம் அங்கீகரிக்கப்பட்ட விபச்சாரத்தை அத்திருவிழாவில் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
வயது வித்தியாசமின்றி நம் குடும்பத்து ஆண்கள் எதிர்படும் அரவானிகளை, பெண்களை சீண்டிக்கொண்டும் பொதுவாக முலைகளை பிடித்திழுக்க, ஆபாச வக்கிர வெறிப்பிடித்த மிருகமென அலைந்தனர். அரவானிகள் தங்கள் விருப்பமின்றி தொடமுயலும் ஆண்களை ஆபாசமாகத்திட்டி ரகளை செய்தனர். நம் குடும்பத்து ஆண்கள் சிலர் அவர்களிடம் உதைவாங்கிக் கொண்டும் ஓட்டமெடுத்தனர். பேரம் படிந்த நம் குடும்ப ஆண்கள் புதுமாப்பிளைப்போல் கொஞ்சிக்கொண்டு அரவானிகளை அணைத்தபடி திரிந்தனர். கோயிலைச் சுற்றியுள்ள வயல் இருளில் ஜோடி ஜோடியாக பதுங்கினர். வசதி படைத்தோர் தங்கள் கார்களில் ஏற்றிக்கொண்டு மறைந்தனர்.
எயிட்ஸ் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் திரையிலும் துண்டுபிரசுரமுமமாக ஆங்காங்கே வினியோகிக்கப்பட்டன. தமிழகம், புதுவையைச் சேர்ந்த மனித உரிமை கழகம் மற்றும் சில தன்னார்வத் தொண்டுநிறுவனம் சேர்ந்து நடத்திய அரங்கில் இலவச ஆணுறை வழங்கப்பட்டது. ஒரு மர ஆண்குறி மாதிரியை வைத்து ஆணுறைகளை பயன்படுத்தும் செயல்முறை விளக்கமும் கொடுக்கப்பட்டது. பால்வினை நோய்குறித்த வண்ணப்படங்களின் மூலம் பாலுறுப்புகளில் ஏற்படும் நோய்குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. பதினைந்து வயது சிறுவனிலிருந்து ஐம்பதைத்தாண்டிய ஆண்கள்வரை குழுக்குழுவாக வந்து ஆணுறைகளை வாங்கிச் சென்றனர். பெங்களுர் சங்கமத்தை சேர்த்தவர்களுடன் சற்று நேரம் பேசிக்கொண்டிருந்தோம். பிறகு தாலிகட்டும் நிகழ்ச்சியையும் அரவான் முன் நிகழ்ந்த கும்மிக்கொட்டும் ஆட்டத்தையும் பார்த்துவிட்டு ஆஷா பாரதியுடன் அரைமணி நேரம் பேசிக்கொண்டிருந்தோம். “சிறுவயதிலேயே குடும்பத்தைவிட்டு துரத்தப்படுவதால் இவர்களுக்கு கல்வியறிவும் தொழிலறிவும் கிடைக்காமல் போகிறது.
படிப்பறிவும் சமூக அங்கீகாரம் அற்ற எங்கள் சமூகத்தினர் 90% பேர் பாலியல் தொழிலையே நம்பி வாழவேண்டியுள்ளது. இவர்களுக்கும் தங்களை இதிலிருந்து விடுத்துகொள்ள போதிய விழிப்புணர்வு இல்லை” எனக் குறிப்பிட்டார். “பத்து மணிக்குமேல் இங்கு தங்க முடியாது. இங்க நடக்கற அநியாயத்தை இதுக்குமேல பாக்க முடியாது” என எங்களிடம் விடைபெற்றுக் கொண்டு கிளம்பிவிட்டார். இவர்களை இப்படியே இந்நிலையிலேயே வைத்திருப்பதுதான் ஆண்களுக்காக சமூகம் வழங்கியுள்ள சலுகை. வீட்டில் மனைவி என்ற பாலியல் அடிமை. திரும்பிய பக்கமெல்லாம் பணத்தை வீசியெறிந்து அவர்களின் வக்கிரத்தைத் தீர்த்துக்கொள்ள பாலியல் தொழிலாளிகளை உருவாக்கி வைத்துக்கொள்வதுடன், கூடுதலாக அரவானி சமூகத்தையும் ஆண்களின் பாலியல் வக்கிரத்துக்கு பலியாக்கிக் கொண்டிருக்கிறது நமது சமூகம். இந்தச் சமூகம் ஆண்களுக்கு கட்டுத்தளையற்ற பாலியல் சந்தையை திறந்து வைத்துக்கொண்டு பெண்களின் கற்பைப் பற்றி மூச்சுமுட்ட பேசுவதன் போலித்தனம் சகிக்க முடியவில்லை.
இரவு பத்துமணியளவிலேயே நிற்க இடமில்லாமல் கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது. டிஸ்கவரி தொலைக்காட்சியில் நீர்த்தேடி நாடுவிட்டு நாடு செல்லும் பெரும்திரளான மிருகங்களைகாட்டி மிரட்சியூட்டுவார்கள். அதுபோல பத்துமணிக்கு மேல் ஆண்கள் மந்தைமந்தையாய் தள்ளிக்கொண்டும் முட்டி மோதிக்கொண்டும் வரத்தொடங்கினர். நாங்கள் பதினொரு மணியளவில் அங்கிருந்து கிளம்பினோம். பேருந்து நிற்குமிடத்துக்கு வருவதற்குள் கையிலிருந்த தண்ணீர் பாட்டிலால் அடித்துக்கொண்டுதான் வர முடிந்தது. போதையில் அடியைவாங்கிக்கொண்டு மிரண்டு விலகினர். வயதுவித்தியாமின்றி எல்லோரும் போதையிலிருந்தனர். மனித உரிமை கழகத்தைச் சேர்ந்த நண்பர்கள் பேருந்துவரை வந்து வழியனுப்பி உதவினர். பேருந்து முக்கி முனகி நகர்ந்து அரை பர்லாங்கிலேயே இரண்டுமணிநேரம் நின்றுவிட்டது. அவரவர்களுக்கு வசதிபட்ட வாகனங்களில் இரவு ஒருமணிவரை கூட்டம் வந்துக் கொண்டேயிருந்தது. ஒரு மணிக்குப் பிறகு தான் எதிர்வரும் கூட்டம் சற்று குறைந்தது. அதன்பிறகு எல்லாப்பேருந்துகளும் நகர்ந்தன.
திருவிழாவுக்கு வருகிறவர்களை வரவேற்க பா.ம.கட்சியும் விடுதலை சிறுத்தை கட்சியினரும் வரவேற்பு பேனர்கள் வைத்திருந்தனர். அழகிப் போட்டிக்கு பரிசளிக்க வந்த ‘பெண்ணே நீ’ ஆசிரியர் கவிதாவை வரவேற்றும் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. ஒரு லட்சம் பேர் இத்திருவிழாவுக்கு வந்திருப்பர். நூற்றுக்கும் குறைவான காவலர்களே பாதுகாப்புப்பணியில் இருந்தனர். இதில் நேர்த்திக்கடன் செய்யக் குடும்பத்துடன் குழந்தைகளுடன் வந்தவர்களும் உண்டு. சுற்றுப்புற மாவட்டங்களைச் சேர்ந்த சிறுவர்களுக்கும் ஆண்களுக்கும் எளிதாக உடலுறவு கிடைக்கும் சந்தையாகவும், சிறுவர்கள் ஆண்களின் வரைமுறையற்ற வக்கிரத்தையும் அத்துமீறலையும் பார்த்து பழகிக்கொள்ளும் சமூக செயல்முறை பயிற்சிப் பட்டறையாகவும் இத்திருவிழா இருந்தது. குடும்பத்தினருடன் வந்த குழந்தைகள் இந்த காட்சிகளை எப்படி எதிர்க்கொண்டு எதிர்காலத்தில் என்ன முன்மாதிரியுடன் ஆரோக்கியமாக வளரமுடியும். ஆனால் பள்ளிகளில் முறைப்படி பாலியல் கல்வியை அறிமுகப்படுத்த மதவாதிகளும் அரசியல்வாதிகளும் விடுவதில்லை.
ஏனெனில் குழந்தைகளும் பெண்களும் பாலியல் விழிப்புணர்வு அடைந்தால் ஆண்களின் வக்கிரத்துக்கு பலியாவதும் பாலியல் சுரண்டலுக்குள்ளாவதும் சில சதவீதம் குறைந்து போய்விடுமல்லவா? இந்த கூட்டத்தில் சமூகத்தின் அனைத்து வகுப்பினரும் இருந்ததில், தேசிய ஒருமைப்பட்டையும் சமூக இடஒதுக்கீடு பிரதிநிதித்துவத்தையும் காணமுடிந்தது. ஆண்களின் கற்பைப் பற்றி எந்த அரசியல்வாதிகளுக்கும் குடும்ப பெண்களுக்கும் சந்தேகமோ கேள்வியோ கிடையாது. இவர்கள் குடும்பத்துக்குள் கொண்டுவருவது பால்வினைநோய் மட்டுமில்லை. ஒருவனுக்கு ஒருத்தி என்ற நமது பண்பாட்டு முழக்கத்தை மட்டுமில்லை. ஆணாதிக்க வக்கிரசீழ்பிடித்த இந்த கலாச்சாரத்தை முளைப்பாரி மாதிரி காலங்காலமாக பெண்கள் தலையில் சுமக்கவைக்கும் திறமையையும்தான். இப்படிப்பட்ட ஆண்களை ஏற்றுக்கொண்டு சகித்துவாழும் பெண்களின் அடிமை மனோவியலை நினைத்தால்தான் பயமாக இருக்கிறது.

ஆசிரியர்
மாலதி மைத்ரி
தொடர்பு முகவரி
1, மாதா கோயில் வீதி,
ரெயின்போ நகர்,
புதுச்சேரி - 605011
கைப்பேசி: 9443090175
Email: malathimaithri@rediffmail.com
க.டென்னீஷ், பெரியபாளையம்.
“நான் மறுக்கவில்லை” என்று இளையராஜா மறுத்திருக்கிறார். அது இருக்கட்டும் பெரியார், அம்பேத்கர் கருத்துக்களை ஆதரிப்பவராக, பார்ப்பன எதிர்ப்பாளராக இளையராஜா இருக்க வேண்டும் என்று ஏன் எதிர்பார்க்கிறார்கள் என்று எனக்கு புரியவில்லை. இளையராஜா ஒரு கலைஞர். மக்களுக்கும் அவருக்குமான தொடர்பு அவருடைய வார்த்தைகளின் மூலமாக இல்லை. அவரின் இசையின் மூலமாகத்தான். இளையராஜாவின் இசையை கொண்டாடுகிற மக்கள், அவருடைய ஆன்மீக வார்த்தைகளை சட்டை செய்வதில்லை. அவர் இசையை கொண்டாடாத அல்லது பொருட்படுத்தாத அறிஞர்கள் தான் அவர் வார்த்தைகளை பிடித்து தொங்குகிறார்கள். அடுத்தவர்கள் என்னவாக இருக்கிறார்கள்? என்று தெரிந்து கொள்வதை விட, இவர்களுக்கு என்ன தெரியுமோ அதன் மூலமாகவே அடுத்தவர்களை பார்ப்பது, என்கிற பழக்கமே இளையராஜா பற்றியான எதிர்பார்ப்பான மதிப்பீடுகளுக்குக் காரணம். 99 சதவீதம் அவர் நம்மோடு இசை மூலமாகத்தான் தொடர்பு கொண்டிருக்கிறார். ஒரு சதவீதமே அவரின் வார்த்தைகள் நம்மை சேர்ந்திருக்கும். 99 சதவீதத்தைப் பற்றி எந்தக் கருத்தும் தெரிவிக்காதவர்கள், ஒரு சதவீதத்தை வைத்துக் கொண்டு அதையே 100 சதவீதம் விமர்சிக்கிறார்கள். “இதுதாண்டா சாக்கு’ன்னு அவரின் பிரமிக்க வைக்கிற இசை அறிவையும் சேர்த்து இளையராஜாவை முற்றிலுமாக நிராகரிக்கிறார்கள்.
தீவிர பார்ப்பன உணர்வு கொண்ட கே.பாலச்சந்தரின் இயக்கத்தில் வெளிவந்த சிந்து பைரவி திரைப்படத்தில் அவர் செய்த கலகம் எத்தனைப் பேருக்கு தெரியும்?
சாருமதி ராகம் நாட்டுபுறப் பாடலில் இருந்து களவாடியது என்பதை “பாடறியேன்… படிப்பறியேன்…’ என்ற பாடலில் சுரங்களோடு பாடி நிரூபித்ததை எத்தனை அறிஞர்கள் அறிந்திருக்கிறார்கள். அந்தப் பாடலை “மரி மரி நின்னே..’ என்று சாருமதி ராகத்தில் அமைந்த ஒரு கீர்த்தனையோடு முடித்திருப்பார் ராஜா. சாருமதி நாட்டுப்புறப் பாடலில் இருந்து திருடியது தான் என்பதை சாட்சியோடு உறுதியாக நிரூப்பித்திருப்பார். அந்தப் பாடலின் இன்னொரு அதிரடி சிறப்பு என்ன தெரியுமா? அந்த சாருமதி ராகம் இளையராஜா உருவாக்கியது. “மரி மரி நின்னே’ என்கிற வரி காம்போதி ராகத்தில் தியாகய்யர் எழுதியது. அதை இளையராஜா தனது அபாரமான பிரமிக்க, வைக்கிற இசை ஆற்றலால் தான் உருவாக்கிய சாருமதி ராகத்தில் இட்டு நிரப்பினார். உண்மையில் தியாகய்யர் சமாதி அடைந்தது அன்று தான்.
கர்நாடக சங்கீதத்தின் புனிதத்திற்கு இளையராஜா அடித்த சாவுமணி அது. இளையராஜாவின் இந்தச் செயல், தீவிரமான பார்ப்பன எதிர்ப்பு வார்த்தைகளை விடவும் படு பயங்கரமானது.
அந்தப் பாடலுக்குப் பிறகு நாட்டுப்புறப் பாடல்கள் மீது ஒரு மதிப்பும், திரை இசை மீது ஒரு மரியாதையையும், கர்நாடக இசை குறித்த ஒரு கலக்கமும் உருவானது அவாளுக்கு. “அதெப்படி பார்ப்பன உணர்வுள்ள பாலசந்தர் படத்தில் இதை செய்ய இளையராஜாவால் முடிந்தது?’ பார்ப்பன எதிர்பாளர் என்கிற உணர்வோ அப்படி ஒரு நிலையிலோ இருந்து அதை செய்யவில்லை இளையராஜா. “இசை ரீதியாக இது சரியாகத்தானே இருக்கிறது தப்பென்றால் நிரூபி’ என்கிற தனது ஈடு இணையற்ற இசையறிவு தந்த செருக்கால் அதை செய்து முடித்தார் இசைஞானி.
இளையராஜா உருவாக்கிய ஒரு மெட்டை மாற்றுகிற தைரியம் இதுவரை எந்த இயக்குனருக்கும் வந்ததில்லை. தமிழர்களின் இனிமை அவர்...
வே.மதிமாறனிடம் கேளுங்கள்

இதை தெகல்கா இதழ் ரகசியமாக வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளது. இந்தியா டுடே மற்றும் தெகல்கா ஆகியவை இணைந்து நடத்திய இந்த ரகசிய ஆபரேசனில் குஜராத் மதக் கலவரத்தின் இன்னொரு பக்கம் வெளியே வந்துள்ளது.
குஜராத்தில் வன்முறை வெடிக்கக் காரணமாக இருந்தது கோத்ரா ரயில் தீ விபத்து. சுமார் 50க்கும் மேற்பட்ட அப்பாவி ராம பக்தர்கள் பலியான இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து தான் வன்முறை தொடங்கியது.
கோத்ரா தொகுதியின் பாஜக எம்எல்ஏவான ஹரேஷ் பட் பஜ்ரங் தள் அமைப்பின் தேசிய துணைத் தலைவராகவும் உள்ளார். இவரையும் குஜராத் வன்முறையில் நேரடியாகப் பங்கு கொண்ட 7 பேரையும், மோடிக்கு மிக நெருக்கமான அரசு வழக்கறிஞரையும் மேலும் 5 பேரையும் தெகல்கா நிருபர்கள் குழு ரகசியமாய் நெருங்கியது.
அவர்களிடம் குஜராத் வன்முறை குறித்து பேசியது. அப்போது அதை ரகசியமாய் கேமராக்களில் படம் பிடித்தது.
Babu Bajrangi
A local Bajrang Dal leader and one of the main conspirators
ஆனால், தாங்கள் படம் பிடிக்கப்படுவது தெரியாமல் எப்படியெல்லாம் வன்முறையை நடத்தினோம், எப்படி ஒரு கர்ப்பிணி முஸ்லீம் பெண்ணின் வயிற்றைக் கிழித்து உள்ளே இருந்த சிசுவை வெளியே எடுத்துப் போட்டு வெட்டினோம் என்பதையெல்லாம் இவர்கள் பேசியுள்ளனர்.
தெகல்கா நடத்திய இந்த ஆபரேசனுக்கு தலைமை வகித்தவர் அதன் நிருபரான ஆஷிஷ் கெய்தான். அவர் 'விஎச்பியும் இந்துத்துவாவும்' என்ற புத்தகம் எழுதப் போகிறேன். அதற்காக கருத்துக்கள், விவரங்களைத் திரட்டி வருகிறேன் என்று கூறித்தான் இவர்களை நெருங்கியுள்ளார்.
Arvind Pandya
State Counsel appointed by the Narendra Modi government to defend it before the Nanavati-Shah Commission
கிட்டத்தட்ட 6 மாத காலமாக இவர்களிடம் பேசி, அதை ரகசியமாக வீடியோ எடுத்து வந்துள்ளார் கெய்தான்.
இந்த வீடியோவில் அவர்கள் பேசியுள்ளது மிக பயங்கரமாக உள்ளது.
வன்முறைக்கு டைம் கொடுத்த மோடி..
கோத்ரா எம்எல்ஏவான பட் கூறுகையில், கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நடந்தவுடன் மோடி தலைமையில் பாஜக பிரமுகர்கள், பஜ்ரங் தள், விஎச்பி, ஆர்எஸ்எஸ் அமைப்பினரின் கூட்டம் நடந்தது. அதில் நான் உங்களுக்கு 3 நாட்கள் நேரம் தருகிறேன். அதற்குள் என்ன வேண்டுமானாலும் (வன்முறை, கொலை, தாக்குதல்) செய்து கொள்ளுங்கள். ஆனால், 3 நாட்களுக்குப் பின் நான் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டியாக வேண்டும் என்றார்.
மேலும் நரோடா பாட்டியாவில் பெரிய அளவில் கொலைகள் நடந்த பின்னர் அதற்காக எங்களை மோடி அழைத்துப் பாராட்டினார் என்று கூறியுள்ளார் பட்.
போலீஸ் உதவியோடு பாம் தயாரித்தோம்...
Ramesh Dave
VHP's point man who planned attacks on Muslims in Kalupur and Dariyapur
விஎச்பியைச் சேர்ந்த அனில் படேல், தாபல் ஜெயந்தி படேல் ஆகியோர் கூறுகையில், விஎச்பி தொண்டர்கள் எனது தொழிற்சாலையில் தான் குண்டுகளைத் தயாரித்தனர். ராக்கெட் லாஞ்சர்களைக் கூட தயாரித்து முஸ்லீம்கள் மீது தாக்குதல் நடத்தினோம். இதற்கு போலீசாரும் எங்களுக்கு உதவியாக இருந்தனர்.
பெண்ணின் வயிற்றை கத்தியால் வெட்டினேன்....
பஜ்ரங் தள் தலைவர் பாபு பஜ்ரங்கி கூறுகையில், நான் அந்த கர்ப்பிணி முஸ்லீம் பெண்ணின் வயிற்றை கத்தியால் வெட்டினேன். அதிலிருந்த சிசுவை எடுத்து வெளியே எரிந்து வெட்டினேன் என்று கூறியுள்ளார்.
மதன் சாவல் என்ற பாஜக தொண்டர் கூறுகையில், முன்னாள் காங்கிரஸ் எம்பி ஜாப்ரி தனது பகுதி முஸ்லீம்களை காப்பாற்ற முயன்றார். தனது வீட்டில் அவர்களுக்கு அடைக்கலம் தந்தார். இதையடுத்து நாங்கள் வாள்களுடன் அவரது வீட்டை முற்றுகையிட்டோம். அப்போது கை நிறைய பணத்தை அள்ளிக் கொண்டு வந்த ஜாப்ரி இதை வைத்துக் கொண்டு அனைவரையும் விட்டுவிடுமாறு கூறினார்.
நாங்கள் சரி என்றோம். பணத்தைக் கொடுத்த அவர் கதவைத் திறந்தார். அப்போது வீட்டுக்குள் நுழைந்து அவரைப் பிடித்தோம். இருவர் கையை பிடித்துக் கொள்ள நான் அவரது கைகளை வெட்டினேன் பின்னர் அவரது மர்ம உறுப்பை வெட்டி எரிந்தோம். பின்னர் அவரை துண்டு துண்டாக்கி எரித்துவிட்டோம். அவர் வைத்திருந்த பணத்தையும் எடுத்துக் கொண்டோம் என்று கூறியுள்ளார்.
இன்னொரு தொண்டர் கூறுகையில், நரேந்திர மோடியால் தான் நான் சிறையில் இருந்து வெளியே வந்தேன். அவர் நீதிபதிகளை இடமாற்றம் செய்து தனக்கு வேண்டியவர்களை நியமித்ததால் தப்பித்தேன் என்றார்.
இவை அனைத்தும் வீடியோவில் அப்பட்டமாக அப்படியே பதிவாகியுள்ளன.
குஜராத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் வெளியாகியுள்ள இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரகாஷ் ரத்தோட் என்பவர் கூறுகையில், பாஜக எம்.எல்.ஏ மாயா பென் வீதி வீதியாக சென்று முஸ்லீம்களை விரைவாக கொல்லுங்கள், யாரையும் விடாதீர்கள் என்று வேகப்படுத்தினார் என்று கூறியுள்ளார்.
சுரேஷ் ரிச்சர்ட் என்பவர் கூறுகையில், போலீஸார் எங்களை அழைத்து சில இடங்களை சுட்டிக் காட்டி இங்கு முஸ்லீம்கள் சிலர் ஒளிந்துள்ளனர். அவர்களை விடாதீர்கள் என்று எங்களுக்கு வழி காட்டினர். நாங்கள் அந்த இடத்திற்குச் சென்று வெளியிலிருந்து கதவுகளை மூடி உள்ளேயே வைத்து அவர்களை எரித்துக் கொன்றோம் என்று தெரிவித்துள்ளார்.
விஸ்வ இந்து பரிஷத்தைச் சேர்ந்த ரமேஷ் தவே கூறுகையில், இதை நாங்கள் இப்போது செய்யவில்லை. கடந்த 20, 25 வருடங்களாகவே எங்கள் கண்ணில் பட்டவர்களையெல்லாம் (முஸ்லீம்கள்) கொன்று குவித்துள்ளோம் என்று கூறியுள்ளார் தவே.
அரசு, நீதித்துறை, காவல்துறையின் கூட்டுச் சதி:
குஜராத் கலவரம் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட நானாவதி ஷா கமிஷன் முன்பு ஆஜரான அரசு வக்கீல் அரவிந்த் பாண்ட்யா கூறுகையில்,
கலவரத்தில் ஈடுபட்டோருக்கு எதிரான வழக்குகள் அனைத்தும் நீர்த்துப் போகச் செய்யப்பட்டன. முதல்வர் நரேந்திர மோடி உயர் காவல்துறை அதிகாரிகளை அழைத்து இந்துக்களுக்கு சாதகமாக நடந்து கொள்ளுமாறு வாய் மொழியாக உத்தரவிட்டார்.
கோத்ரா சம்பவத்திற்குப் பிறகு மோடி மிகவும் அப்செட் ஆக இருந்தார். அகமதாபாத்தில் முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் பகுதியான ஜுஹபுரா பகுதியில் தானே குண்டு வீசத் தயாராக இருப்பதாக அவர் கூறி வந்தார். ஆனால் முதல்வர் பதவியில் இருந்ததால் அப்படிச் செய்ய முடியவில்லையே என்று வருத்தப்பட்டார்.
முஸ்லீம்களைக் கொன்ற தினத்தை ஆண்டுதோறும் இந்துக்கள் பெரிய அளவில் கொண்டாட வேண்டும். அதே சமயம் அவர்களைக் கொல்வதை விட நசுக்குவதுதான் மிகவும் சிறந்தது. இதன் மூலம் முஸ்லீம்கள் காலம் பூராவும் இந்துக்களுக்குக் கட்டுப்பட்டு இருப்பார்கள்.
முஸ்லீம்களைக் கொல்வதைப் போல அவர்கள் மீது பொருளாதார நெருக்கடியைத் திணிக்க வேண்டும் என்று கூறியுள்ள பாண்ட்யா இதை விட பயங்கரமாக, இந்த சம்பவத்தை விசாரிக்க நியமிக்கப்பட்ட நீதிபதி நானாவதி ஷா கமிஷனையே விலைக்கு வாங்கிவிட்டன பாஜக மற்றும் அதன் கூட்டு அமைப்புகள் என்றும் தெரிவித்துள்ளார்.
அதுகுறித்து அவர் கூறுகையில், நீதிபதி நானாவதியுடன் கூட்டாக விசாரித்த கே.ஜி.ஷா (இவர்தான் கமிஷனின் தலைவர்) ஒரு பாஜக அனுதாபி என்றும் கூறியுள்ளார் பாண்ட்யா.
வி.எச்.பி. பொதுச் செயலாளர் திலீப் திரிவேதி கூறுகையில், மாநிலம் முழுவதும் உள்ள வக்கீல்கள் எங்களுக்கு சாதகமாக இருந்தனர். கலவரத்தில் ஈடுபட்டவர்களுக்கு சாதகமாக அவர்கள் வாதாடினர் என்றார்.

ஒரு அரசும் ஒவ்வொரு அரசும்ஆந்திர விவசாயிகள் மீதான ஒடுக்குமுறையும் இடதுசாரி அறிவு ஜீவிகளும்
தேவிபாரதி
புதுதில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத் துறைப் பேராசிரியராகப் பணிபுரியும் ஜெயதி கோஷ் தன் அறிவுத் துறை நண்பர்களுக்கு ஓர் அறிக்கையினை மின்னஞ்சல் வழி அனுப்பினார். இளம் இடதுசாரி அறிவுஜீவிகளுள் முக்கியமானவராகக் கருதப்படும் அநிகேத் ஆலம் அவ்வறிக்கையை மின்னஞ்சல் மூலம் தன் சக அறிவுஜீவிகளுக்கு அனுப்பி அவர்களுடைய ஒப்பங்களைப் பெற்று இணையத்தில் வெளியிட விரும்பினார். மின்னஞ்சலில் பெறப்பட்ட ஜெயதி கோஷின் அறிக்கையை வெளியிடும் தன் விருப்பத்தைத் தெரிவித்து அதற்கு அவர்களுடைய இசைவையும் ஒப்பத்தையும் வேண்டி ஒரு குறிப்பைத் தன் நண்பர்களுக்கு 29.7.07 அன்று மின்னஞ்சல் மூலம் அனுப்பினார் அநிகேத் ஆலம். ஜெயதி கோஷின் அறிக்கையும் அநிகேத் ஆலத்தின் குறிப்பும் கீழே தரப்பட்டுள்ளன.
ஜெயதி கோஷ் அவர்களின் அறிக்கை
கீழே கையொப்பமிட்டுள்ள நாங்கள், ஜூலை 28 ஆம் தேதி நடைபெற்ற மாநிலந்தழுவிய முழு அடைப்பின்போது, ஆந்திரப் பிரதேசத்தின் முடிகொண்டா கிராமத்தில் காவல் துறையினரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டால் அதிர்ச்சியும் திகைப்பும் அடைகிறோம். பலருடைய உயிரிழப்புக்கும் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் படுகாயமுற்றதற்கும் காரணமாகியிருக்கிறது இந்தத் துப்பாக்கிச் சூடு. முழு அடைப்புப் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள்மீது, முதல்வர்தானே ஒப்புக்கொண்டதுபோல, பலப்பிரயோகம் செய்ய வேண்டாம் என உத்தரவிட்டிருந்ததையும் மீறித் துப்பாக்கிச் சூடு நடத்தியிருப்பது காவல் துறையின் மேலாதிக்கச் செயலைக் காட்டுகிறது.
ஆனால், தங்கள் நிலத்தைப் பாதுகாக்கப் போராடும் ஏழைகளின் இயக்கத்தை மாநில அரசு எவ்வாறு ஒடுக்கியது என்பதைச் சுட்டிக்காட்டாமல் காவல் துறையின் அப்படிப்பட்ட மேலாதிக்கத்தை விளக்கிவிட முடியாது. போராடும் இயக்கத்தின் தலைவர்கள்மீது மூவாயிரத்துக்கும் அதிகமான வழக்குகள் போடப்பட்டுள்ளன, ஆயிரக்கணக்கானோர் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளார்கள்.
போராடும் ஏழை மக்கள்திரளின் எழுச்சியை அனுதாபத்தோடும் தனது தேர்தல் வாக்குறுதிகளுக்கு உடன்பாடான முறையிலும் எதிர்கொள்ளாமல், அந்த இயக்கத்தை நசுக்கப் பயனற்றதும் அபாயகரமானதுமான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது மாநில அரசு. இத்தகைய ஒடுக்குமுறை நடவடிக்கைகளைக் கைவிடுமாறு நாங்கள் மாநில அரசைக் கேட்டுக் கொள்கிறோம். தம் நிலவுரிமைக்காக எழுச்சிபெற்றுப் பெருந்திரளாகப் போராடும் ஏழை மக்களோடு நாங்கள் எங்களை முழுமையாக ஒன்றிணைத்துக்கொள்கிறோம். ரங்காராவ் அறிக்கையின்படி, தன்வசமுள்ள 60 இலட்சம் ஏக்கர் நிலத்தைப் பகிர்ந்தளிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசைக் கேட்டுக்கொள்கிறோம்.
- ஜெயதி கோஷ்
அநிகேத் ஆலத்தின் குறிப்பு
அன்புள்ள நண்பர்களே!
ஆந்திரத் துப்பாக்கிச் சூடு மீதான ஓர் அறிக்கையை இணைத்துள்ளேன். இதை நாங்கள் நாளை வெளியிடத் திட்டமிட்டுள்ளோம். உங்கள் பெயரைச் சேர்த்துக்கொள்ளலாமா எனத் தயவுசெய்து தெரிவியுங்கள். மேலும், அறிக்கையில் கையொப்பமிட விருப்பமுள்ள மற்றவர்களின் பெயர்களையும் தெரிவியுங்கள்
- அநிகேத்
புரட்சிகரச் செயல்பாடும் ஆழ்ந்த மனிதநேயமும் மட்டுமே சோசலிசத்தின் உண்மையான சுவாசம். உலகம் தலைகீழாக்கப்பட வேண்டும். வழியாமல் தவிர்க்கப்பட்டிருக்கக்கூடிய ஒவ்வொரு துளிக்கண்ணீரும் ஒரு குற்றச்சாட்டே. மிருகத்தனமான கவனக்குறைவால் எளியதொரு மண்புழுவை நசுக்குகிறவன் குற்றவாளியே.
- ரோஸா லக்ஸ்ம்பர்க் (1918)
(அநிகேத்தின் மின்னஞ்சலுக்குக் கீழே காணப்பட்ட மின்னஞ்சல் ஒப்பம்)
அநிகேத் ஆலத்தின் மின்னஞ்சல் தகவலைப் பெற்றவர்களுள் ஒருவரான யோகேந்திர யாதவ், ஜெயதி கோஷின் அறிக்கையில் கையொப்பமிடுவது தொடர்பாகச் சில கேள்விகளை எழுப்பியிருந்தார். இந்தியாவின் தலையாய தேர்தல் ஆய்வாளரான யாதவ் பிற்பட்டோ ருக்கான இட ஒதுக்கீட்டுக் கொள்கையின் ஆதரவாளர். இடஒதுக்கீட்டுக்கு எதிரானவர்களின் வாதங்களைத் தர்க்கரீதியிலும் சமூகநீதி அடிப்படையிலும் எதிர்கொண்டுவரும் அறிஞர். 30 ஜூலை 2007 அன்று அநிகேத்துக்கு யாதவால் அனுப்பப்பட்ட அந்த மின்னஞ்சலில் காணப்படும் தகவல் இது.
யோகேந்திர யாதவின் எதிர்வினை
அன்புள்ள அநிகேத்,
எனக்கொரு தயக்கம். நாட்டின் பிற பகுதிகளில் நடந்த இதையொத்த நிகழ்வுகளைக் கண்டித்துள்ளது போன்றே, ஆந்திராவில் நடந்த காவல் துறைத் துப்பாக்கிச் சூட்டையும் நான் கண்டிக்கிறேன். இந்த நிகழ்வுகளைக் கண்டிப்பதில், ழிகிறிவி இயக்கத்துடன் நான் ஏற்கனவே இணைந்துள்ளேன். சற்றுப் பெரிய அளவில் நந்திகிராமில் நடந்த இதே போன்ற நிகழ்வைக் கண்டிப்பதற்கு எதுவுமே செய்யாமல் ஆந்திராவில் நடந்த சம்பவத்தைக் கண்டித்து அறிக்கைவிட விரும்பும் பல நண்பர்களோடு இணைந்துகொள்ளுமாறு நீங்கள் என்னை அழைக்கிறீர்கள். இந்த அறிக்கையைப் படித்தேன். அதனோடு நான் உடன்படுகிறேன். ஆனால், இதே அறிக்கை (சில குறிப்பான விஷயங்கள் நீங்கலாக) நந்திகிராம் நிகழ்வுக்கும் பொருந்தும் (சி.பி.எம். தொண்டர்கள் நந்திகிராம் பகுதிக்குள் பத்திரிகையாளர்களை நுழையவிடாமல் தடுத்ததன் விளைவாகவே அந்நிகழ்வு தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் நமக்குக் கிடைக்காமல்போயின). மேற்கு வங்கத்தின் நந்திகிராமிலும் ராஜஸ்தானின் ஸ்ரீகங்கா நகரிலும் நடந்த இதே போன்ற நிகழ்வுகளையும் உங்கள் அறிக்கை சுட்டிக்காட்டும்பட்சத்தில், நான் அதில் கையொப்பமிடவே இன்னமும் விரும்புகிறேன்.
(இத்தகையதொரு அறிக்கை, அண்மைக் காலத்தில் நாட்டின் பிற பகுதிகளில் நடந்த இதையொத்த நிகழ்வுகளையும் சுட்டிக்காட்டாமல் இருப்பது சரியான நிலைப்பாடாக இருக்க முடியாது. இதை நீங்கள் யோசித்துப் பாருங்கள். நாம் ஏன் இதைத் தவிர்ப்பதற்கு விரும்புகிறோம்?) என் அணுகுமுறையில் ஏதாவது தவறு இருப்பின் தயவுசெய்து அறிவுறுத்துங்கள். தயவுசெய்து சங்கடப்படாமல் எனது முந்தைய அறிக்கையை யார் யாருக்கெல்லாம் அனுப்பியிருந்தீர்களோ அவர்களுக்கு இதையும் அனுப்பிவையுங்கள்.
தங்கள் அன்புள்ள
- யோகேந்திர யாதவ்
யாதவின் மேற்கண்ட மின்னஞ்சலைத் தன் குறிப்புரை ஒன்றுடன் அநிகேத் அலம் 30 ஜூலை 2007 அன்று மற்றவர்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பி வைத்தார். அக்குறிப்பும் கீழே தரப்பட்டுள்ளது.
அநிகேத் ஆலத்தின் மின்னஞ்சல் குறிப்பு
அன்புள்ள அனைவருக்கும்,
ஆந்திரப் பிரதேசக் காவல் துறைத் துப்பாக்கிச் சூடு தொடர்பாக முன்னர் அனுப்பிய அறிக்கைக்கு யோகேந்திர யாதவ் அவர்களின் எதிர்வினையை அனுப்புகிறேன். எனக்கு அனுப்பப்பட்டிருந்தாலும் அரசியல் கிளர்ச்சிகளுக்கும் காவல் துறை அட்டூழியங்களுக்கும் நாம் ஆற்றும் எதிர்வினைகள் தொடர்பான சில முக்கியமான பிரச்சினைகளைக் குறித்து அவருடைய அஞ்சல் விவாதிக்கிறது எனக் கருதுகிறேன். ஆகவே, நான் முன்னர் அனுப்பிய மின்னஞ்சலைப் பெற்றுள்ள அனைவருக்கும் அதை அனுப்புகிறேன்.
- அநிகேத்
இம்மின்னஞ்சல் செய்திகளைப் பெற்றவர்கள் ஆற்றிய எதிர்வினைகள் குறித்து இதுவரையிலும் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. யோகேந்திர யாதவ் எழுப்பிய கேள்விகளுக்கு இடதுசாரி அறிவுஜீவிகள் ஏதாவது பதிலளித்தார்களா எனவும் தெரியவில்லை. இடதுசாரி அறிவுஜீவிகள், குறிப்பாக சி.பி.எம். சார்பு ஊடகவியலாளர்கள், யோகேந்திர யாதவின் இந்தக் கேள்விகளுக்குப் பதிலளித்திருக்க வேண்டும். அப்படி எதுவும் நடக்காதது ஏனோ?
மின்னஞ்சல் தகவல்களை அனுப்பி உதவியவர்: ஆ.இரா. வேங்கடாசலபதி
பாரிசில் மகாகவி பாரதியாரின் 125 ஆம் ஆண்டு விழா
குத்து விளக்குகளுக்குத் தாய்க்குலங்கள் ஒளி ஊட்டத் தமிழ்த் தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது, பரதக் கலை ஆசிரியை திருமதி சேஷா கற்பகம் அவர்களுடைய அருமையான பரத நாட்டியம் நிறைவு பெற்றபின் முத்தமிழ்ச்சங்கத்தின் தலைவர் திரு கோவிந்தசாமி செயராமன் (அடியார்க்கன்பன்) அனைவரையும் வரவேற்றார். நகையும் சுவையுமாக நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிய பேராசிரியர் பெஞ்சமின் லெபோஅழைப்பு விடுக்க புதுவைக்குப் புகழ் சேர்த்து வரும் நாவலாசிரியர் பிரபஞ்சன் தலைமை ஏற்று விழாவைத் தொடங்கி வைத்தார். புதுச்சேரி லிசேவில் பல்லாண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற செவாலியே சச்சிதானந்தன், தமிழியக்கன் திரு தேவகுமரன் இருவரும் வாழ்த்துரை வழங்கினர். கவிஞர் கி; பாரதிதாசன், 'பாரதி; இன்று வந்தால்' என்ற தலைப்பில் தம் உள்ளத்திலிருந்து சில செய்திகளைக் கவிதையாக்கிப் படைத்தார். இமய மலையைப் பாரதியின் தலைப்பாகையாக உருவகப்படுத்திக் கவிதை படை(டி)த்ததை அனைவரும் நன்கு ரசித்தனர். புதுச்சேரிப் புலவர் வாணிதாசனாரின் மருமகனும் பல்லாண்டுகள் ஆசிரியப் பணியாற்றி நல்லாசிரியர் விருது பெற்றவருமான திரு வ.கலியபெருமாள் பாரதியார், பாரதிதாசனார், வாணிதாசனார் என்ற முப்பெருங்கவிஞர்களை ஒப்பிட்டுத் தம் கருத்துகளை வெளியிட்டுப் பேசினார். திரு நாகரத்தின கிருஷ்ணா, 'பாரதியின் பெண்ணியல்' பற்றி உரையாற்றினார். பிரபஞ்சன் தம் தலைமை உரையில் பாரதியின் ஆளுமையை உணாத்திப் பல கோணங்கள்pல் அருமையாகப் பேசியதை மக்கள் ஆடாமல் அசையாமல் ரசித்தனர்.
பகலுணவுக்குப் பின் சபை மீண்டும் கூடியது. இந்த விழாவுக்கென அச்சிடப்பட்ட விழா மலரைப் பேராசிரியர் பெஞ்சமின் லெபோ தமக்கே உரித்தான அடுக்கு மொழியில் மிடுக்காக அறிமுகப் படுத்திப் பேச, மலரைத் திரு பிரபஞ்சன் வெளியிட்டார். சிறப்பாக அழைக்கப் பட்டவர்கள் மேடையில் மலரைத் திரு பிரபஞ்சன் கரங்களில் இருந்து பெற்றுக்கொண்டனர். மற்றவர்களுக்கு மலர்கள் சபையில் வழங்கப்பட்டன. மலரின் அட்டைப் படத்தை அழகான முறையில் வடிவமைத்த திரு சிவாவுக்குக் பாராட்டுகள் வழங்கப் பட்டன. பின்னர் பாரதியாரின் கவிதைகள் அடங்கிய கையடக்க ஏடுகளை இலவசமாகவே முத்தமிழ்ச் சங்கம் வழங்கியது. பின்னர், ஈழக் கவிதாயினி திருமதி லினோதினி ஷண்முகநாதன் பாரதி பற்றிய தம் கண்ணோட்டத்தைக் கவிதையில் தந்தார். தொடர்ந்து காரை. இளையபெருமாள் என்ற இசைக்கலைஞர் - இவரும் பாரதி விழாவுக்காகவே கடலூரிலிருந்து பாரீஸ் வந்தவர் - இனிய குரலெடுத்துப் பாரதியார், பாரதிதாசன், உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் ... பாடல்களை உணர்ச்சியோடு பாட மக்கள் பெரிதும் சுவைத்து மகிழ்ந்தனர். திரு பிரபஞ்சன், முத்தமிழ்ச்; சங்கம் வழங்கிய பாராட்டுப் பட்டயங்களைக் கவிஞர் கி. பாரதிதாசனுக்கும் இசைக் கலைஞர் காரை. இளையபெருமாளுக்கும் வழங்கிப் பொன்னாடை போர்த்திப் பதக்கம் அணிவித்துப் பெருமை படுத்தினார். ஏனைய பேச்சாளர்கள், கவிதாயினி ... முதலியோர்க்கும் அவர் பொன்னாடை போர்த்திப் பதக்கம் அணிவிக்க அனைவரும கைதட்டி மகிழ்ந்தார்கள். பாரிசில் உள்ள இந்தியத் தமிழ்க் கத்தோலிக்க ஞானகத்தின் சார்பாகச் செவாலியே சிமோன் யூபர்ட் திரு பிரபஞ்சன் அவர்களுக்குப் பொன்னாடை போர்த்தினார். முத்தமிழ்ச் சங்கம், பாரதி விழாக்குழு சார்பாகத் திரு பிரபஞ்சன் அவர்களுக்குப் பொன்னாடை போர்த்தப்பட்டுப் பதக்கம் வழங்கப் பட்டது. பின் திரு பிரபஞ்சன் அவர்கள் தம் இறுதி உரையை நிகழ்த்தினார். சிறுகதை, கதை, இக்கால இலக்கியம் மேல் நாட்டு இலக்கியம் எனப் பலவற்றை;க குறித்து விரிவாக, சிறப்பாகப் பேசிய அவர் விழுமியங்களை (வேல்யூஸ் - values) வலியுறுததிப் பேசினார்.
இறுதி நிகழ்ச்சியாக, மகாகவி பாரதியின் கனவுகள் : மெய்யாகி ஒளிர்கின்றன? பொய்யாகி மறைகின்றன? என்ற தலைப்பில் பட்டிமன்றம் தொடங்கியது. மெய்யாகி ஒளிர்கின்றன என்ற அணியில் திரு நாகரத்தின கிருஷ்ணா, திருமதி ராசி சிமோன் சிறப்பாக வாதிட்டனர். பொய்யாகி மறைகின்றன என்று மிகச் சிறப்பாக வாதிட்டவர்கள் திரு யோகானந்த அடிகள், திரு மோரோ நடராசன். சுதந்திரம் பெறுதல் என்ற கனவைத் தவிர, பாரதியின் ஏனைய கனவுகள் - சாதி, மத பேதமில்லா சமூகம், பெண்ணடிமை, இந்திய ஒற்றமை...- பொய்யாகி மறைகின்றன என்று சுருக்கமாகச் சுட்டிக்காட்டினார் நடுவர் பேராசிரியர் பெஞ்சமின் லெபோ. தம் கருத்துக்கு பாரதியாரின் பேத்தி விஜய பாரதி அவர்களின் கூற்றை எடுத்துக் காட்டி மகாகவியின் கனவுகள் பொய்யாகி மறைகின்றன எனத் தீர்ப்பு சொல்லி மகாகவியின் கனவுகளை மெய்யாக்க நாம் முயலவேண்டும் என்ற வேண்டுகோளுடன் பட்டி மன்றத்தை முடித்துவைத்தார். முத்தமிழ்சங்கத்தின் நன்றி உரையுடன் விழா இனிதே நடந்து முடிந்தது.
இந்த விழாவுக்காகத் தம் உடல் நலத்தையும் பாராமல் தன்னலம் இல்லாமல, திரு கோவிந்தசாமி செயராமன் (அடியார்க்கன்பன்), திரு சிவா, திரு கௌதமன் (பிரபஞ்சன் அவர்களின் மகனார்)... உட்படப் பலரும் உழைத்தனர். அவர்கள் அத்தனை பேரும் மகாகவிக்கு உண்மையான அஞ்சலி செய்கிறவர்கள் ஆகிறார்கள். அவர்களைப் பாராட்டுவோம்.
- தகவல் : பேராசிரியர் பெஞ்சமின் லெபோ
விழாவின் போது நடந்த சில கூத்துகளை இங்கு காஞ்சி பிலிம்ஸுக்கே உறிய நகைச்சுவையுடன் விமர்சிக்க காண்பீர்:
-பாண்டியன், திருமங்கலம்.
தேவாரம், திருவாசகம் சமஸ்கிருதத்தை எதிர்த்து ஆலய வழிபாட்டை தமிழில் நடத்துவதற்கும் தமிழை வளர்ப்பதற்காகவும் உருவானதில்லை. சமண சமயத்தை ஒழிப்பதற்காக உருவானது. சமணர்களோடு அனல் வாதம் புனல் வாதம் செய்து சைவசமயத்தை மீட்டதாக கதை சொல்கிறார்களே, அது கதைதான். சமணர்களை வாதத்தில் வெல்ல முடியாத ஞான சம்பந்தம், மாணிக்கவாசகன், திருநாவுக்கரசு, சுந்தரமூர்த்தி போன்ற கோழைகள் மன்னர்களை தூண்டி விட்டு சமணர்களை நெருப்பில் வாட்டியதைதான், ‘அனல்’ வாதம் என்று கதைவிடுகிறார்கள்.
பார்ப்பன-பார்ப்பனரல்லாத உயர்ஜாதிக்காரர்களின் கூட்டுக் களவானித்தனம்தான் தேவாரம்-திருவாசகம்-பெரியபுராணம். பொண்டாட்டியக் கூட்டிக் கொடுத்தவன்-பொண்டாட்டியத் தொடமாட்டேன்னு சொன்னவன்-இவனுங்களுக்கெல்லாம் காட்சிக் கொடுத்த சிவன், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த உண்மையான பக்தர் நந்தனுக்கு காட்சி கொடுக்காமல், தில்லைவாழ் அந்தணர்களை விட்டு கொளுத்தச் சொன்னவன்தானே. (‘’அம்பலவர் அருளால் இங்கு அணைந்தோம் வெய்யஅழல் அமைத்து உமக்குத் தரவேண்டி’’-பெரியபுராணம்)
தேவாரம், திருவாசகத்தின் செயல் சமணத்தை வீழ்த்துவது-பார்ப்பனியத்தை தூக்கி நிறுத்துவது. அவ்வளவுதான். மற்றபடி அதை தமிழ் என்கிற கட்-அவுட் வைத்து எவ்வளவு தூக்கி நிறுத்தினாலும், ஒரு போதும் பார்ப்பனியத்திற்கு எதிராக அது நிற்காது. அதனால்தான் அதன் பின்னால் போன முற்போக்காளர்களையும் அது முட்டுச் சந்தில் கொண்டு போய் நிறுத்திவிட்டது.
தேவாரம் புகழ் பெற்றிருந்த காலத்தில் ஒரு சித்தன், அவைகளின் மீது இப்படி துப்பினான், ‘’தாவாரம் இல்லை - தனக்கொரு வீடில்லை - தேவாரம் ஏதுக்குடி?’’
வே.மதிமாறனிடம் கேளுங்கள்

தமிழில் படிக்கும் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 மாணவர்களுக்கு தேர்வுக் கட்டணம் கிடையாது - தமிழக அரசு ஆணை
எப்படியும் தமிழ்ல பட்டம் வாங்கிக்கிட்டு பிச்சைதான் எடுக்கப் போரானுங்கன்னு தானோ என்னவோ முதல் பிச்சையை அரசாங்கமே போடுது. அட போங்கடா குமுடிசட்டி பசங்களா!
நீதிமன்றத்துலேயும் சரி கோவில்லையும் சரி தமிழ்ல பேச முடியாதாம். இதுக்கு அரசாங்கம் வாயயையும் அதையும் பொத்திகிட்டு இருக்குமாம். அப்புறம் இன்னா மசுருக்கு எங்களுக்கு மட்டும் தமிழ். தமிழ் படிக்கிறவன எல்லாம் கொதிக்கிற எண்ணை சட்டியில போடவேண்டும். தமிழ் தமிழ்ன்னு பேசிக்கிட்டு திரிகிற அரசியவாதிங்கள அந்த எண்ணை சட்டி அடுப்புக்கு விறகாக முறுச்சி வைக்கணும்.
இனிமே எல்லாரும் சம்ஸ்கிருதமும் ஆங்கிலமும் மட்டும் படிங்க. தமிழ் தமிழ்ன்னு சொல்லிக்கிட்டு திரிஞ்சிக்கிட்டு இருக்கிற அரசியல்வாதிங்களை வீட்டுக்கு அனுப்புங்க. அப்புறம் பாருங்க தமிழ் தானா வளரும்.
அவரது வாக்குப்படி புதன்கிழமை அவருடைய உடல் (உயிரின்றி) பொள்ளாச்சிக்கு வந்தது.
கடந்த 6 மாதங்களுக்கு முன் பொள்ளாச்சிக்கு வந்துவிட்டுத் திரும்பிச் செல்லும்போது தாயிடம் அதிகாலை 3 மணி வரை பேசிக் கொண்டிருந்தாராம்.
மகளின் படிப்புக் கெடக் கூடாது என்பதற்காக அண்மையில்தான் பொள்ளாச்சிக்குக் குடும்பத்துடன் மணிவண்ணன் வந்தார்.
பொதுவாக எல்லையைக் காக்கும் பகுதிகளில் இருக்கும் ராணுவ வீரர்களுக்கு 2 ஆண்டு காலப் பணிதான் வழங்கப்படுமாம். ஆனால் இந்தத் தேசத்துக்குப் பாடுவதற்காக மணிவண்ணன் கூடுதலாக ஓராண்டுப் பணி நீட்டிப்புக் கேட்டிருந்தார். அதன்படி இப்போது 3-வது ஆண்டில் பணியில் இருக்கிறார்.
மனைவியின் மன உறுதி
உயிரிழந்த ராணுவ கர்னல் மணிவண்ணன் மனைவி சாந்தி, கணவர் உயிரிழந்ததற்காக யாரும் அழக்கூடாது என்று கூறினார். ஆனால் பெட்டியில் இருந்த மணிவண்ணன் முகத்தைத் தடவியபடி அனைவருக்கும் ஆறுதல் கூறிய அவர் கணவரின் முகத்தைக் கடைசி வரையில் பார்க்கவேயில்லை.
கணவரின் உடலை மின் மயானத்துக்கு எடுத்துச் செல்லும்போது மனைவி சாந்தி சல்யூட் அடித்து மரியாதை செய்தது காண்போர் நெஞ்சை உருக்குவதாக இருந்தது.
அக்காள் பிரீத்தி சொன்னது போலவே தம்பி கார்த்திக்கும் அழுதபடியே அப்பாவுக்குச் சல்யூட் அடித்து அஞ்சலி செலுத்தியதைப் பார்த்தோரின் கண்கள் கலங்கின.
மணிவண்ணன் குடும்பத்துக்கு அதிக உதவி செய்ய முதல்வர் உறுதி
Scientists Create Artificial VirusA common argument heard from creationists is that human beings are unable to create life; therefore, it is unreasonable to think that life originated through any natural means. Yes, it's absurd to think that that would qualify for someone as a good reason to believe in gods, but for some reason it does. Now, however, those same people will have to find a new argument because scientists have managed to create an artificial virus.
Unlike previous successes at creating life from "parts" of other living things, this time scientists have created life from scratch. With just 14 days of work and synthetic genes, they created a bacteria-eating virus in the lab, according to Yahoo News:
The Phi-X174 bacteriophage was developed from its genetic code. ... The work was led by Craig Venter, the head of the Institute for Biological Energy Alternatives (IBEA), who has also been closely involved in work on mapping the human genome sequence. ... "With this advance it is easier to imagine -- in the not-too-distant future -- a colony of specially designed microbes living within the emission-control system of a coal-fired plant, consuming its pollution and its carbon dioxide, or employing microbes to radically reduce water pollution or to reduce the toxic effects of radioactive waste," [US Secretary of Energy Spencer Abraham] said. Aside from the fact that it casts aside many standard creationist arguments, this is a very exciting scientific development, as Abraham explains above. There is a very real potential for scientists to create all sorts of organisms for very specialized purposes - eating radioactive waste, eating toxins, and so forth. Of course, there are also dangers here - can they be sure that the life they create won't mutate into something else? I'm not sure, but they had better be.
Scientists create a virus that reproducesIt is the stuff of science fiction and bioethical debates: The creation of artificial life. Up until now, it's largely been just that.
By Elizabeth Weise, USA TODAY
But an important technical bridge towards the creation of such life was crossed Thursday when genomics pioneer Craig Venter announced that his research group created an artificial virus based on a real one in just two weeks' time.
When researchers created a synthetic genome (genetic map) of the virus and implanted it into a cell, the virus became "biologically active," meaning it went to work reproducing itself.
Venter cautioned that the creation of artificial human or animal life is a long way off because the synthetic bacteriophage — the virus that was created — is a much simpler life form. Bacteriophages are viruses that infect bacteria.
The project was funded in part by the Department of Energy, which hopes to create microbes that would capture carbon dioxide in the atmosphere, produce hydrogen or clean the environment.
But the questions ethicists have raised about such work are numerous: Should we be playing God? Does the potential for good that new life forms may have outweigh the harm they could do?
Arthur Caplan, who heads the University of Pennsylvania's Center for Bioethics, says yes. This technology "is impressive. It's powerful and it should be treated with humility and caution," Caplan says, "But we should do it."
A genome is made up of DNA "letters," or base pairs, that combine to "spell" an individual's chromosomes. The human genome project was completed in April.
This summer, researchers at Venter's Institute for Biological Energy Alternatives bought commercially available strands of DNA and, using a new technology, coaxed them together to form a duplicate of the genome of a bacteriophage called phi X.
"It's a very important technical advance," says Gerald Rubin, a molecular geneticist at the Howard Hughes Medical Institute. "You can envision the day when one could sit down at a computer, design a genome and then build it. We're still inventing the tools to make that happen, and this is an important one."
Venter notes the synthetic bacteriophage has 5,000 base pairs in its genome. The human genome has 3 billion, so similar work in human form probably won't happen in this decade, he says.
To date, the largest genome that was synthesized was the 7,500-base-pair polio virus. But that was only semi-functional and took three years to complete.
The researchers chose to put the new technology into the public domain for all scientists to use. It will appear in the next few weeks on the Web site of the Proceedings of the National Academy of Sciences.
The technology raises safety issues, says David Magnus of Stanford's Center for Biomedical Ethics. Even putting it in the public domain is "a double-edged sword," he says. That presumes that allowing everyone access will keep the good guys ahead of the bad guys. "It's a gamble. ... It's a bet that everyone has a stake in," he says.
« உலக இயக்கத்திற்கு பொருளாதாரம் இன்றியமையாதது என்பதை காரல்மார்க்ஸ் போல உணர்த்தினார்.« காந்தியடிகளின் ஒத்துழையாமை அழைப்பை ஏற்று தமிழகத்தில் பலபோராட்டங்களை வெற்றிகரமாக நடத்தியதோடு அல்லாமல் தன் வழக்கறிஞர் அங்கியையும் தீயிட்டு கொளுத்தியவர்.
« கேள்விக்குறிகளாக கூனிக்கிடந்த தொழிலாளர் தம் உரிமைகளை பெற்று தலை நிமிர்ந்திட வழிவகுத்தவர்.
« கான்பூரில் நடந்த பொது உடமை மாநாட்டில் முதன்முதலாக தோழர்களே என்று தொழிலாளர்களை அழைத்தார்.
« சென்னை மாநகராட்சி தோற்றுவிக்கப்பட்ட காலத்தில் அதன் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் பள்ளி குழந்தைகளுக்கு இலவச மதிய உணவு திட்டத்தினை மாநகராட்சி சார்பில் தோற்றுவித்தார்.
« பகுத்தறிவு கொள்கையை கட்டுரைகளாகக் குடியரசு பத்திரிகையில் எழுதும்படி பெரியாரே கேட்டுக் கொள்ளும் அளவிற்கு தகுதியும் திறமையும் படைத்தவர்.
« தொழிலாளர்களுக்காக லேபர் கிஸான் என்ற கட்சியை உருவாக்கி அதன் வாயிலாக லேபர்கிஸான் கெஸ்ட் என்ற ஆங்கில பத்திரிக்கையும் புது உலகம் என்னும் தமிழ்மாத மார்க்சிய ஏடு நடத்திய முதல் இந்திய தொழிசங்க தலைவர்.
« அதற்கு மேலாக தென்இந்தியாவில் பொது உடமைக் கட்சியை உருவாக்கி மே தினம் இந்தியாவில் கொண்டாடுவதற்கு காரணமாக இருந்தவர்.
« பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களை சோவியத் நாட்டின் கௌரவ விருந்தினராக அழைக்க செய்து அந்நாட்டின் மதிப்புமிகு குடிமகன் என்னும் விருதினைப்பெற்று தந்தவர்.
« மகாகவி பாரதியோடு நெருங்கிய நட்புறவு கொண்டதோடு மட்டுமல்லாமல் அம்மகாக்கவிஞரின் இன்னுயிர் பிரிந்த கனத்தில் அவரை தனது மடியில் கிடத்திநெஞ்சு கணத்திருந்தவர்.
« சோவியத் புரட்சி நடந்ததை சென்னை மாகாணத்தில் முதன் முதலாக தெரிவித்தவர். பாரதியை பாடலாக பாடசொன்னவர்; லெனின் அவர்களோடு நேரடி தொடர்பு கொண்டு கடிதபோக்குவரத்தை அவர்மறையும் வரை கொண்டிருந்தவர்.""
அட இப்படியும் தமிழ்நாட்டில் ஒரு மேதையா? இவர் யாராக இருக்கும்? இவரைப் பற்றி பள்ளிகூடத்துல படிக்கவேயில்லையேன்னு நினைக்கிறீங்களா? அது என்னமோ சரிதாங்க. சரி இந்த மேதையை பற்றி தெரிந்துகொள்வோம் வாங்க...
விரைத்துக் கிடக்கும் பிள்ளையைக் கையிலேந்தியபடி ""மயிலோ... மயிலோ'' (""என் பிள்ளை... என்பிள்ளை'') எனக் கதறுகிறாள் இந்தோனேசிய மீனவப் பெண். ""கடல் காத்தோட யம்மா... 12 வயசுப் பிள்ளை யம்மா....'' என்று உடைந்து அரற்றுகிறாள் அக்கரைப்பட்டியின் தாய்.
குழந்தைகளின் சாவு கொடியதுதான். ஆனால் ஒரு கட்டையில் குதிரையேறி அலையில் மிதந்து வந்திறங்கும் அந்த மீன் குஞ்சுகளைப் பிணமாகக் காணும்போது நெஞ்சு வெடிக்கிறது. மனிதகுலத்தை நாகரிகத்திற்கு அறிமுகப்படுத்திய அந்த மழலை இனம் ""ஐயா எங்களுக்கு உதவ யாருமே இல்லையா'' என்று கதறுவதைக் காணும்போது கண்களில் நீர் திரள்கிறது.
செத்துக் கிடக்கும் மீன்களைப் போலவே இரைந்து கிடக்கின்றன அவர்களது உடல்கள் தெருவில், புதரில், கூரையில், கருவேலங்காடுகளில்! அழுகிய மீன்களைக் கவ்வும் நாய்கள் அந்த உடல்களையும் கவ்வுகின்றன. கருவாட்டைப் போல அடுக்கிக் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன உடல்கள். மீனுக்கும் மீனவனுக்குமிடையிலான வேறுபாட்டை அந்த அலைகள் அறியாமலிருக்கலாம். நாம்?
மரணத்தைவிடக் கொடியது தப்பியவர்களின் வாழ்க்கை. கலங்கிய கண்களுடன் எச்சரிக்கைகளை மீறி கடலை நோக்கி விரைகிறார்கள் பிணங்களைத் தேட. எந்த ஊரில், எந்தக் காட்டில் பிள்ளையின் உடலைத் தேடுவது, அல்லது எந்த மண்டபத்தில் அவன் உயிரை எதிர்பார்த்து ஓடுவது? சகோதரி மகளை எரித்துவிட்டு நொறுங்கிய வீட்டினருகே அதிகாரிகளுக்காகக் காத்திருக்கிறாள் ஒரு தாய் நிவாரணம் பெறுவதற்கு நிரூபணம் காட்ட. அவர்களது வாழ்க்கையை இடிப்பதற்கு மட்டுமே விஜயம் செய்த புல்டோசர் இப்போது பிணம் தேட ஊர்ந்து வருகிறது.
குளச்சல் தேவாலயத்தில் புதைக்கத் தோண்டிய குழியிலேயே சுனாமியால் அடக்கம் செய்யப்பட்ட உடல்கள். சிதைத் தீயின் சூடு தாங்காமல் தீப்பிடித்து எரிகிறது நாகையின் மயானக் கூரை. மீனவர்களின் இறுதிப் பயணம் நகராட்சி குப்பை லாரியில். அவற்றைக் கடந்து விரைகின்றன கச்சிதமாய் அடுக்கப்பட்ட கோக் பெப்சி குளிர்பான வாகனங்கள்.
சுனாமியின் இரைச்சல் அடங்கி விட்டது மீனவர்களின் கதறல் அடங்கி விட்டது கொல்கிறது மவுனம். பள்ளிகள், அலுவலகங்கள், திரையரங்குகள் எல்லாம் இயங்குகின்றன. அதிகாரபூர்வ துக்கம் இல்லை இறங்க மறுக்கிறது தேசியக் கொடி இரங்க மறுக்கிறது மக்கள் மனம்.
உண்மையான கண்ணீரைக் காணச் சலித்து சீரியல் கண்ணீருக்குத் தாவுகின்றன தொலைக்காட்சிக்கு இரையான பிணங்கள். ஊழல் நரி நரசிம்மராவின் பிணம் ஹுசேன் சாகர் ஏரிக்கரையில் சந்தனக் கட்டைகளால் மணக்க மணக்க எரியூட்டப்படுகிறது. அவரது தியாகங்கள், தந்திரங்கள், சாதனைகள், லீலைகள் என வாழ்க்கைக் குறிப்பு விரிகிறது. குறிப்புகள் ஏதுமற்ற மீனவர்களின் உடல் டயரோடு டயராக நடுத்தெருவில் எரிகிறது.
தேவனாம்பட்டினம், தாழங்குடா, கோடிக்குப்பம், மல்லினச் சேரி, குளச்சல், மணமேல்குடி எனக் கல்லறைகளின் பட்டியல் கிழக்குக் கடற்கரை முழுவதும் நீள்கிறது. அண்ணா சமாதி, எம்ஜிஆர் சமாதி போன்ற அலங்காரங்கள் வேண்டாம் அடையாளம் கூட இல்லாமல் அழுகுகின்றன மீனவர்களின் உடல்கள்.
மீன்களின் பெயரைச் சப்புக் கொட்டத் தெரிந்த நாக்கில், அந்த மக்களின் உப்பைத் தின்று வளர்ந்த உடலில் விசுவாசம் இல்லை.
ஆசிரியர்களும், மாணவர்களும், அலுவலர்களும், தொழிலாளர்களும் ஒவ்வொரு மாவட்டமும் திரண்டு நின்றிருந்தால் அந்த மக்கள் கடல், வங்கக் கடலுக்கு விடையாய் இருந்திருக்கும். பிள்ளையை இழந்து கதறும் தாய்மார்களை அரவணைக்கப் பெண்கள் சென்றிருந்தால், நாம் ஈரமுள்ளவர்கள் என்பதற்கு அது சான்றாய் இருந்திருக்கும். ஐந்து நாட்களாகியும் அசையாத அரசு எந்திரத்தை அசைக்கப் போராடியிருந்தால், நாம் மனிதர்கள் என்பதை நாமே புரிந்து கொண்டிருக்க முடியும்.
சுனாமி உயிரற்ற இயற்கை. நாம் அதன்மீது ஏற்றிச் சொல்லும் மனிதப் பண்பு சீற்றம். நாம் உயிரும் உணர்வும் உள்ள மனிதர்கள். மவுனம் நம்மீது படர்ந்திருக்கும் மரணம்!
அடக்குமுறையை எதிர்கொள்வது கவுரவமானது. ஆளும் வர்க்கத்தின் கருணை எனும் மலத்தை விழுங்க நேர்வது கொடுமையானது. அந்தக் கருணையின் உட்பொருளை அறிந்தவர்களுக்கோ, அது கற்பழிப்பை ஏற்று அனுபவிக்கக் கோரும் கொடுமைக்கு நிகரானது.
சத்திரமும் சாவடியும் திருவிழாக் கூழும் நிறைந்த நம் வள்ளல் மரபு மீனவர்களையும் தன் கருணைப் பார்வையிலிருந்து தப்பவிடவில்லை. அரசியல்வாதிகளும், ஆன்மீகவாதிகளும், ஆலை முதலாளிகளும், நடிகர்களும் நன்கொடையைச் சொரிகிறார்கள். அந்தக் காசின் மதிப்புக்கும் பன்மடங்கு அதிகமாக அவர்கள் தேடிக் கொள்ளும் விளம்பரம் நமக்குப் பிரமிப்பூட்டுகிறது. நாளேடுகளில் பிணங்களின் அருகருகே வள்ளல் வேடமிட்ட பிணந்தின்னிகளின் முகங்கள். அவற்றில் அவர்கள் மறைத்துக் கொள்ள விரும்பாத தற்பெருமை மறைத்துக் கொள்ள முடிகிற குற்றங்கள்!
இந்தத் தரும சிந்தனையின் தத்துவத்தை ஒரே வரியில் சொல்லிவிட்டது தினமணி: ""துரதிருஷ்டசாலிகளுக்கு அதிருஷ்டசாலிகள் உதவுவதன் மூலம் பேரழிவை வெல்லலாம்.'' துரதிருஷ்டசாலிகளை மொய்க்கிறார்கள் அதிருஷ்டசாலிகள்.
அரசுத் தொலைபேசித் துறையை ஏமாற்றி 500 கோடி கொள்ளையடித்த அம்பானிகளின் சொத்து ஒரு லட்சம் கோடி அனில் அம்பானி வழங்கும் நிவாரணம் ஒரு கோடி. கடலைத் தமது மீன்பிடிக் கப்பல்களுக்கும், கடற்கரையைக் கேளிக்கை விடுதிகளுக்கும் விட்டுத்தரச் சொல்லும் "மீனவ நண்பர்களான' இந்தியத் தரகுமுதலாளிகள் வீசும் எலும்பு 3.5 கோடி. குஜராத் நிலநடுக்கத்தின் அழிவை இனப்படுகொலையால் வென்று காட்டிய கொலைகாரன் மோடி 10 கோடி பில்கேட்சுடன் கூட்டணி சேர்ந்திருக்கும் "தேசியவாதி' இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி 5 கோடி 1200 கோடி சொத்து வைத்திருக்கும் மதுரை ஆதீனத்தின் ஆன்மீக மொய் ஒரு லட்சம் பத்தே ஆண்டுகளில் 1600 கோடி உலக சாம்ராச்சியத்தை உருவாக்கி ஆன்மீக உலகில் கின்னஸ் சாதனை படைத்த அமிருதானந்தமாயி வழங்கும் உணவு மருத்துவ உதவி படத்துக்கு 4 கோடி வாங்கும் விஜய்காந்தும், 2 கோடி வாங்கும் விஜய்யும் தலா 10 லட்சம் மீனவர் குப்பத்தின் சண்டை நடிகர்களைப் "புரட்டி எடுத்து' சுப்ரீம் ஸ்டாராக உயர்ந்த சரத்குமார் 250 மூட்டை அரிசி. அதிருஷ்டசாலிகளின் அணிவகுப்பு நீள்கிறது. நீண்டு கொண்டே போகிறது.
"கொடுப்போர் எல்லாம் அதிருஷ்டசாலிகளே' என்பதால் அரசும் ஒரு அதிருஷ்டசாலி. சன் தொலைக்காட்சியின் ஒருநாள் வருவாயை வழங்கலாமென்று தன் பேரப்பிள்ளைகளுக்குச் சொல்ல முடியாத கருணாநிதி, வருமான வரி வருவாயில் ஒரு சதவீதத்தை நிவாரணத்துக்கு ஒதுக்குமாறு மன்மோகன் சிங்கிடம் கோருகிறார். அவரோ நன்கொடை தந்தால் வரிவிலக்கு தருவதாக முதலாளிகளுக்கு ஆசை காட்டுகிறார். அதிருஷ்டசாலிகளிடம் அறவுணர்வைத் தூண்ட வேண்டுமானால், "தரும சிந்தனை லாபகரமானது' என்பதை அவர்களுக்கு ஆதாரபூர்வமாக நிரூபிக்க வேண்டும்.
அன்பு, மனிதநேயம், தோழமை, தியாகம் போன்ற துரதிருஷ்டம் பிடித்த சொற்களால் அவர்களை ஏய்க்க முடியாது. ""ஒருநாள் சம்பளத்தைக் கொடு'' என்று அரசு ஊழியர்களுக்கு உத்திரவிடுவதைப் போல ""ஒரு சதவீத லாபத்தைக் கொடு'' என்று முதலாளிகளுக்கு அரசு உத்திரவிட முடியாது. தங்கள் சொந்தப் பணத்தை மட்டுமல்ல, அரசுப் பணத்தை அள்ளி விடுவதையும் அதிருஷ்டசாலிகளால் சகித்துக் கொள்ள முடியாது.
""இந்தப் பேரழிவால் அரசின் நிதி நிலையில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது'' என்ற நிதியமைச்சரின் அறிவிப்பு, சங்கேத மொழியில் முதலாளிகளுக்குத் தரப்படும் தன்னிலை விளக்கம்.
சென்னைக்கும் நாகைக்கும் 2 நாட்கள் கழித்தே வந்தன இந்திய அரசின் மீட்புக் கப்பல்கள் ஆனால், 26ஆம் தேதியே இலங்கைக்கும் மாலத்தீவுக்கும் 4 கப்பல்கள் விரைந்ததன் காரணம், அயலாரை நேசிக்கும் அறமென்றா எண்ணுகிறீர்கள்? தற்போதுதான் கையெழுத்தாகியிருக்கிறது இந்திய இலங்கை பாதுகாப்பு வர்த்தக ஒப்பந்தம். கையெழுத்திட்ட மை காய்வதற்குள் அடித்த சுனாமி அதிருஷ்டம் இலங்கையை நோக்கி அவர்களது கருணைப் பார்வையை விரைந்து திருப்புகிறது. இலங்கையின் பொருளாதார மறுநிர்மாணம்! எத்தகைய பொன்னான வாய்ப்பு! எனவேதான், நம்முடைய மீனவர்கள் தத்தளித்து மூழ்கிச் சாகும் அதேநேரத்தில், இந்தியக் கடற்படையின் நீர்மூழ்கும் வீரர்கள் இலங்கைக் கடலில் குதிக்கிறார்கள்.
தெளிந்த கடல்நீரும் மர்மமான பொருளாதாரமும் கொண்ட மாலத்தீவில் தான் என்ரான் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களின் பினாமி தலைமையகங்கள் இயங்குகின்றன. இந்தியத் தரகு முதலாளிகளின் சுற்றுலா மையமும், "சுதேசி' சுவிஸ் வங்கியும் அந்த மர்மத் தீவில்தான் மையம் கொண்டிருக்கின்றன. மாலத்தீவின் மகிமை இது.
சுனாமி பலருக்கு அதிருஷ்டக் காற்று. நொறுங்கிய படகுகளை அள்ளுவதற்குள் புதுப்படகும் வலையும் வாங்கக் கடனுதவியை அறிவிக்கிறது பாரத ஸ்டேட் வங்கி. வட்டி விகித வீழ்ச்சியால் வங்கிகளில் தேங்கிக் கிடக்கும் பணம், குட்டிபோடக் கிடைத்த அரிய வாய்ப்பு. மீன் விற்ற காசு நாறவா செய்யும்? ஒரே கல்லில் மூன்று மாங்காய்! அரசு வங்கியின் தரும சிந்தனை நிலைநாட்டப்பட்டு விட்டது "சுனாமி மீனவனின் துரதிருஷ்டம்' என்ற தத்துவமும் நிலைநிறுத்தப்பட்டு விட்டது அப்படியே மீனவனைத் தின்னும் இறால் பண்ணைகளுக்கும் கடனுதவி வழங்கி மீனவன் காலில் நங்கூரம் கட்டப்பட்டு விட்டது. 3000 கோடி அந்நியச் செலாவணி ஈட்டும் இறால் பண்ணைகளைப் புதுப்பிப்பதைவிடப் பெரிய தேசபக்தி நடவடிக்கை உண்டா என்ன?
""இந்தப் பேரழிவால் அரசின் நிதி நிலையில் பாதிப்பு இல்லை'' என்று கூறிய சிதம்பரம் ""ஆதாயம்தான் உண்டு'' என்ற உண்மையை நாகரிகம் கருதி மறைத்துவிட்டார் போலும்! "பன்னாட்டு நிறுவனங்களின் பொருட்களை நுகரும் பொருளாதாரத் தகுதியற்றவர்கள்' என்ற முறையில் மீனவர்கள் இந்தப் பொருளாதாரத்திற்குத் தேவையற்றவர்கள் "பன்னாட்டு மீன் பிடிக் கப்பல்களுக்கு இடையூறு' என்ற முறையிலும் தேவையற்றவர்கள் "அழகான கடற்கரையோர சுற்றுலா விடுதிகள் காலூன்ற விடாமல் தடுக்கும் அசிங்கங்கள்' என்ற முறையிலும் இவர்கள் அவர்களுக்கு அப்புறப்படுத்தப்பட வேண்டியவர்கள்.
அதிருஷ்டசாலிகள் உலகெங்கிலுமிருக்கிறார்கள். சுனாமியை விஞ்சும் மரணப் பேரலையான அறிவுச் சொத்துடைமை எனும் கூர்வாளைத் (மருந்து விலையேற்றத்தை) தன் முதுகுக்குப் பின்னே மறைத்து வைத்துக் கொண்டு ""நான் உதவட்டுமா?'' என்று புன்னகைக்கிறார் புஷ். அது பிணங்களுக்கு நாய்கள் செய்யும் உதவி!
துரதிருஷ்டசாலிகளும் கூட உதவுகிறார்கள். திருவாரூரின் தலித் குடியிருப்பான அழகிரி நகரில் 45 மீனவக் குடும்பங்களைப் பராமரிக்கிறார்கள் அந்த ஏழை மக்கள். அம்மையப்பன் எனும் அருகாமைக் கிராமத்தில் 45 மீனவர்களைப் பராமரிக்கின்றன 3 குடும்பங்கள். கடலோரக் கிராமங்கள் பலவற்றிலும் இத்தகைய துரதிருஷ்டசாலிகள் நிறைந்திருக்கிறார்கள்.
அதிருஷ்டசாலிகள் தோற்றுவிக்கும் பேரழிவை எதிர்கொள்ள துரதிருஷ்டசாலிகளாகவே இருப்போம்!
""என்ன செய்வேன், என் மனைவியையும் குழந்தையையும் புதைக்க இடமில்லையே'' என்று கண்கலங்குகிறார் ஒரு முதியவர். சுற்றிலும் நட்சத்திர விடுதிகள், நீச்சல் குளங்கள், கேளிக்கை அரங்குகள். நொறுங்கிச் சிதைந்த போதிலும், அந்த இடங்கள் அழகானவை தூய்மையானவை அசுத்தமான ஏழை மக்கள் நுழைய முடியாதவை.
அந்த இடம் சுமத்திரா தீவு. சுனாமி அலைகள் முதலில் தாக்கிய நெற்றிப் பொட்டு. ஜாவா, சுமத்திரா, தாய்லாந்து, மலேசியா, மகாபலிபுரம், இலங்கை, மாலத்தீவுகள் என எல்லா இடங்களுக்குமிடையில் ஒரு ஒற்றுமை உண்டு. சுனாமியால் தாக்கப்பட்டதல்ல அந்த ஒற்றுமை. கிழக்கிலிருந்து சுனாமி வந்து தாக்கு முன்னரே மேற்கிலிருந்து வரும் மேட்டுக்குடிச் சுற்றுலாப் பயணிகள் அந்த மண்ணின் மைந்தர்களுடைய வாழ்வையும் நிலத்தையும் தாக்கிச் சூறையாடிவிட்டார்கள். வசிக்கும் மக்களின் கையிலிருந்து ரசிக்கும் கனவான்களின் பைக்கு மாறிவிட்டது, அந்த மண். இதோ, புதைக்க இடமில்லாமல் தன் சொந்த மண்ணில் காத்து நிற்கிறார் அந்த முதியவர்.
மரத்தில் தொங்கும் கார்கள், கூரையில் ஏறிய படகுகள் போன்ற அழிவின் "கவர்ச்சி'க் காட்சிகளுடன் போட்டியிட முடியாத மீனவப் பிணங்கள் பின்புலத்தில் நகருகின்றன. சுற்றுலாப் பயணிகளின் நிலை எண்ணிப் பதறுகின்றன, அரசுகள். சுனாமி தாக்கிய அந்தத் தருணத்தில், சனியன் பிடித்த தெற்கு, தென்கிழக்காசிய நாடுகளில் சிக்கிக் கொண்ட 10,000 பிரிட்டிஷ் சுற்றுலாப் பயணிகளை எண்ணி உருகுகிறது பி.பி.சி. தொலைக்காட்சி. பாஸ்போர்ட் தொலைத்த அமெரிக்க ஐரோப்பியப் பயணிகளுக்காக புதிய அலுவலகங்கள் மின்னல் வேகத்தில் திறக்கப்படுகின்றன.
யானைகளின் தேசமாக நமக்கு அறிமுகப்படுத்தப்பட்ட தாய்லாந்திலும் அழிவு! மக்களைப் புள்ளி விவரங்களாகவும், கடல் சறுக்கு விளையாடிச் செத்த மன்னனின் பேரனை "சுற்றுலாத் தியாகி'யாகவும் நமக்கு அறிமுகப்படுத்துகிறார் அந்நாட்டின் பிரதமர்.
அந்தமானின் கறுப்பினப் பழங்குடி மக்களின் கதி மூன்று நாட்களுக்குப் பின்னரும் தெரியவில்லை. அவர்கள் பழைய புகைப்படங்கள் மூலம் நமக்கு அறிமுகப்படுத்தப்படுகிறார்கள். சுற்றுலாப் பயணிகளோ நேரடி ஒளிபரப்பில். இந்தியன் ஏர்லைன்சின் மீட்பு விமானத்திற்குள் தாவி ஏறுகிறார்கள், சுற்றுலாப் பயணிகள். குளச்சலில் புதைந்து இறந்த 1000 மீனவர்களைக் காட்டிலும், விவேகானந்தர் பாறையில் சிக்கிக் கொண்ட 500 சுற்றுலாப் பயணிகள் குறித்த கவலையே காமெராக்களின் பெருங்கவலை!
விலைமாதர்களும், குழந்தை விபச்சாரமும், மசாஜ் பார்லர்களும், சர்வதேச உணவு வகைகளைச் சமைக்கும் கலைஞர்களும், ராக்பாப் இசைக்கலைஞர்களும் நடனக் கலைஞர்களும், ஷாருக்கானுக்கு கேளிக்கை அரங்கத்தை நொடிப் பொழுதில் நிர்மாணிக்கும் தொழில்நுட்ப வல்லுனர்களும் நிறைந்த இலங்கையில் போதிய மருத்துவர்களும் நர்சுகளும் இல்லை. உதவி கோருகிறார் சந்திரிகா வேண்டுகோள் விடுகிறார் தாய்லாந்து பிரதமர்.
சென்னை அருகிலுள்ள ஃபிஷர்மேன் கோவ், டெம்பிள் பே, எம்.ஜி.எம். பீச் ரிசார்ட் ஆகியவற்றுக்கு நேர்ந்த சேதம் பற்றிக் கவலை வெளியிடும் எகனாமிக் டைம்ஸ் நாளேட்டின் வாயிலாக சுற்றுலா நிவாரணத்துக்கு அடிபோடுகிறார்கள் முதலாளிகள். பொக்லைன் எந்திரங்களும், தேவாரமும் தேவைப்படாமலேயே மெரினாவின் மீனவர்களைச் சுத்தம் செய்து தந்த இறையருளை எண்ணி அவர்கள் இரகசியமாக மகிழக் கூடும். மீனவர்களற்ற மெரினா அவர்கள் கனவில் விரியக் கூடும். ஆண்டுக்கு 3,21,329 வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும், 3000 கோடி அந்நியச் செலாவணியும் வழங்கும் குழந்தை விபச்சார மையமான கோவாவை மேற்குக் கரையில் படைத்த இறைவனுக்கு அவர்கள் நன்றி சொல்லவும் கூடும்.
கடலில் விளையாடும் சுற்றுலாப் பயணிகளைக் காப்பாற்றுவதையே கதையாகக் கொண்ட "பே வாட்ச்' என்ற அமெரிக்கத் தொலைக்காட்சித் தாடர் இதோ நம் கண் முன்னே உயிர் பெற்று ஓடுகிறது.
அந்தத் தொடரின் நாயகி பமீலா ஆண்டர்சனின் கொழுத்த மார்பகங்கள், பருத்த தொடைகள், தாய்லாந்தின் அலைச்சறுக்கு, இலங்கையின் கடல் கோல்ஃப், பாங்காக்கின் மசாஜ் பார்லர்கள், குமரியின் சூரிய உதயம், எலியட்ஸ் கடற்கரையின் உயர்குடிக் காதலர்கள், மகாபலிபுரத்தின் விபச்சார மாளிகைகள்...
தனது வற்றிப் போன மார்பே பிய்ந்து சிதறும்படி அடித்துக் கொண்டு கதறும் கடலூரின் மீனவப் பெண் சுமத்திராவின் கடலோரம் இன்னும் காத்து நிற்கும் அந்த முதியவர்.
இவை இருவேறு உலகங்களல்ல எதிரெதிர் உலகங்கள். நமது அழிகியலும் ரசனையும் அறிவைக் காவு கொள்ளும் தருணமிது. கவனியுங்கள்!
கட்டுமரத்தின் பின்புலத்தில் குமரியின் சூரிய உதயம் வலை பிரிக்கும் மீனவனின் பின்புலத்தில் பரந்து கிடக்கும் மெரினா! பழங்குடி மக்களின் கறுப்பழகை ஜொலிக்க வைக்கும் அந்தமானின் நீலப் பெருங்கடல். ரசனைகளும் வேறுபடும்போது கவலைகள் வேறுபடும். கண்ணீரும் வேறுபடும்.
இயற்கை, எழில், அலை, கடல், இன்பச் சுற்றுலா குறித்த உங்கள் மனப் பதிவுகளனைத்தையும், அந்த மீனவப் பெண்ணின் கண்ணீரால் அழுந்தத் துடைத்துவிட்டுப் பாருங்கள்! அழகியல் மயக்கங்கள் தெளியும் அதன் பின்னுள்ள ஆளும் வர்க்க "கவலைகளின்' உட்பொருள் புரியும்.
கேதம் (துக்கம்) கேட்பது நமது மரபு. அதுவே துக்கத்தின் சுவடேயில்லாத சம்பிரதாயமாக மாறும் போது?
ஆனால், ஆறுதலுக்காக ஏங்கித் தவிக்கும் இந்த மக்கள்? இப்படியொரு நாடகத்தை அவர்கள் கண்டதில்லை. ""என்னைப் பெத்த அம்மா'' என்று ஊரான் பிள்ளைகளைக் கட்டியழும் அந்தப் பெண்கள், கண்ணீரில்லாமல் உதடு துடிக்காமல் கூறப்படும் ஆறுதலைக் கேட்டதில்லை.
இது சாத்தியமா? சாத்தியம்தான். ஒரேநாளில் சென்னை, கடலூர், நாகை, குமரி என தமிழகத்துக்கே "ஆறுதல்' கூறிவிட்டு போயஸ் தோட்டத்தில் வந்து இளைப்பாறுதல் சாத்தியம் என்று நிரூபித்திருக்கிறார் புரட்சித் தலைவி. ஹெலிகாப்டரின் சன்னல் வழியே கூட பூமியைக் குனிந்து பார்க்காமல், மருத்துவமனைப் படுக்கையில் துடிக்கும் மீனவர்களைக் குனிந்து பார்க்காமல் ஆறுதல் கூறுவதைச் சாத்தியமாக்கியிருக்கிறார் ஜெ.
சுனாமியை விஞ்சும் வேகத்தில் இந்தச் சுற்றுப் பயணத்தை ஏற்பாடு செய்திருக்கிறது அரசு எந்திரம். முதல்வரின் பாதுகாப்பு ஏற்பாடுகள், அவரது ஹெலிகாப்டர் வந்திறங்க ஓடுபாதை, தங்குவதற்கு அறை, ஆங்காங்கே கழிவறை வசதிகள், முதல்வருக்குப் பிடித்தமான உணவு, அஞ்சலி செலுத்தத் தேவையான பிணங்கள், அவற்றின் நாற்றத்தை அடக்க மருந்துப் பொடிகள், முதல்வர் ஆறுதல் கூறத் தேவையான அகதிகள், அவரை வரவேற்க ஆட்சியர்கள், போலீசு அதிகாரிகள், உயிருக்குப் போராடும் மக்களை உள்ளே விட்டுவிட்டு மருத்துவமனையின் வாயிலில் நின்று முதல்வரை வரவேற்கும் மருத்துவர்கள் எல்லாம் தயார்!
மண்டபங்களில் தங்கியிருக்கும் அகதிகளுடன் கலந்திருந்து கைதட்டத் தேவையான தொண்டர்களும் தயார்! இத்தனைத் தயாரிப்புக்களை அரசு எந்திரம் செய்தபோதும் ஒரு சோகமான முகத்தைத் தயார் செய்து கொள்ள முதல்வரால் முடியவில்லை. ""ஒரு பெண் என்றும் பாராமல் என்னை அவமதித்து விட்டார்கள்'' என்று தமிழகத்தையே சுற்றி வந்து அழுது, தன் துயரத்தைத் தாய்க்குலத்தின் துயரமாக மாற்றிய அந்த நடிகைக்குக் கண்ணீர் வரவில்லை.
""உற்றார் உறவினரை இழந்தது கடவுள் செயல். மனதைத் திடப்படுத்திக் கொள்ளுங்கள்'' என்றார். இந்த அருள்வாக்கை மக்கள் கேட்கச் செய்வதற்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்ட அதிகார வர்க்கத்தைச் சற்று அயர்ந்து கண்மூடக் கூட அனுமதிக்காமல் அடுத்தடுத்து வந்திறங்கினார்கள் அமைச்சர் பெருமக்கள். மாறன், மணிசங்கர், ப.சிதம்பரம், சிவராஜ் பாடீல், சோனியா... அனைவருக்கும் இதே வகையான ஏற்பாடுகள்.
பிறகு சங்கராச்சாரி கைது எனும் தேசியப் பிரச்சினைக்காகப் போராடிக் கொண்டிருக்கும் அத்வானி இந்தப் பிராந்தியப் பிரச்சினைக்காகவும் வந்தார். அவருக்கும் இதே ஏற்பாடுகள்... பாதுகாப்புகள்! தலைவர்களின் துயரம் தொலைக்காட்சிகளிலும் பத்திரிக்கைகளிலும், மக்கள் மனதிலும் பதிவு செய்யப்பட்டு விட்டது. கேதம் கேட்கும் சம்பிரதாயம் முடிந்தது. அரசு எந்திரத்தின் நிவாரணப் பணி முடிந்தது. பிணம் கொத்தும் காக்கைகள் பறந்துவிட்டன.
கொல்வதற்கு மட்டுமே பயிற்றுவிக்கப்பட்டிருக்கும் போலீசு பிணங்களைத் தொடுவதில்லை. அழுகிய பிணங்களை அப்புறப்படுத்துவதற்காக விதிக்கப்பட்ட துப்புரவுத் தொழிலாளர்கள் இதற்காகவே பிற மாவட்டங்களிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறார்கள். இராணுவம் அந்நிய ஆக்கிரமிப்பிலிருந்து எல்லையைப் பாதுகாப்பதற்கானது அதனை இயற்கையால் ஆக்கிரமிக்கப்பட்ட மக்களைப் பாதுகாப்பதற்காகக் களத்திலிறக்குவது தேசத்தின் பாதுகாப்பைக் கேள்விக்குள்ளாக்கி விடும். ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காகத் தேர்தலின்போது முடுக்கிவிடப்படும் அரசு எந்திரம் ஜனங்களைப் பாதுகாக்கப் பயன்படுமாறு வடிவமைக்கப்படவில்லை. ஆசிரியர்கள் மக்கள் தொகையைக் கணக்கெடுக்கலாம், பிணங்களைக் கணக்கெடுக்க மாட்டார்கள். மரம் வளர்ப்புப் பிரச்சாரத்திற்கு மாணவர்களை இறக்கிவிடலாம். மக்களுடன் உறவாட விடுவது அவர்களை மனிதர்களாக மாற்றும் அபாயத்தில் அரசை இறக்கி விடும். லட்சக்கணக்கான தொண்டர்களைக் கொண்ட கட்சிகள் நிவாரணப் பணியிலிறங்குவதில்லை. அவர்கள் தொண்டு செய்யும் உணர்வற்ற தொண்டர்கள்.
கேரளத்தில் கொல்லம் ஆரியசமாஜக் கோயில் கொடிக்கம்பம் தவிர மிச்சம் மீதி இல்லை எல்லாம் சுனாமிப் பேரலை கொண்டு போய்விட்டது.
வேளாங்கன்னி தமிழில் பிரார்த்தனை செய்து கொண்டிருந்த 1000 பேர் அலைக்குப் பலி. ஒவ்வோராண்டும் புனிதப் பயணம் செல்லும் சென்னை அய்யப்பன்தாங்கலைச் சேர்ந்த ஒரு கிறித்தவக் குடும்பம் அலைக்குப் பலி.
நாகூர் சென்னை ஆவடி முசுலீம்புனிதப் பயணிகள் அங்கே கடற்கரையில் பலி.
இலங்கை காலே என்ற இடத்தில் புத்தர் சிலை நீங்கலாக அனைத்தையும் கடல் கொண்டு விட்டது.
— இந்த மதம் தான் என்றில்லை, எல்லா மதங்களிலும் எல்லாக் கடவுளையும் கும்பிடும் பக்தர்கள் பல ஆயிரம் பேர் இந்தோனேசியா, சுமத்ரா, அந்தமான் நிக்கோபார், இலங்கை, இந்தியா என்று எல்லா நாடுகளிலும் சுனாமி அலைகளுக்குப் பலியாகி விட்டார்கள். ""வேறுவேறு மதம் கடவுள் என்று பேதம் நான் பார்ப்பதில்லை'' என்று கடலம்மா சொல்லிவிட்டாளோ?
இறந்த சடலங்களுக்கு அடையாளமாக ஒரு ஃபோட்டோ வைத்து ஃபாதர் பிரார்த்திக்கலாம் ஆனால் கிட்டத்தட்ட 1,20,000 பேர் ஆசியப் பகுதியில் பலியாகி விட்டார்கள். அத்தனை ஆன்மாக்களுக்கும் என்ன அடையாளம் சொல்வது? எந்த மதமென்று சொல்வது?
ஆனால் இப்படி அடையாளம் சொல்லி தங்கள் மதங்களின் சீடர்களாக ஆக்கிக் கொள்பவர்கள் இந்தச் சாவுகளுக்கு எந்தவித ஆன்மீக விளக்கத்தையும் வெட்டவெளிச்சமாகக் கொடுக்க முன்வரவில்லை. மாறாக, பார்ப்பன ஏடான ஜூ.வி. போன்றவை மூலம் வதந்திகள் பரப்புகின்றன.
""திருவாரூர் துறைமுகமாகிவிடும் என கல்வெட்டுக் குறிப்புகள் சொல்வதாக... செவிவழிச் செய்தி ஒன்று... (பற்றி) பேச ஆரம்பித்திருக்கும் சிலர் "திருவாரூர் தியாகராஜர் கோயிலைக் கடல்நீர் தொடவேண்டும் என்றொரு ஐதீகம் இருக்கிறது. கடல் அலைக்குத் தப்பி திருவாரூர் பக்கம் ஈரம் சொட்ட வந்தவர்கள் தியாராஜர் கோயிலில் வந்து தப்பியிருப்பதைப் பார்க்கும்போது அந்த ஐதீகம்தான் பலித்துவிட்டதோ' என்று எண்ணத் தோன்றுகிறது என்கிறார்கள்'' என்று விளக்கம் தருகிறது ஜூ.வி. ஏடு (2.1.2005).
இந்தோனேசியா, சோமாலி இன்ன பிற நாடுகள் பற்றி திருவாரூர் தியாகராஜன் என்ன ஐதீகம் சொல்கிறான்?
மழை கடவுளின் கொடை, அருள், கருணை. சுனாமி அலை வீச்சு இயற்கையின் சீற்றம் கடவுளின் சீற்றம் அல்ல. அப்படிச் சொன்னால் இந்த ஏழைகள் மேல் சீற்றம் கொள்ளும் கடவுள் வெறுக்கப்படுவார். ஆனால் கடவுள்களை முன்தள்ளுகின்ற மதமும், அதன் கோயில்களும் ஒடுக்கப்பட்ட ஏழை, "கீழ்ச்சாதி' மக்களை, விலக்கி வைக்கின்றன. சவேரியார் சர்ச் தவிர, சுசீந்திரம், நாகராஜா, சென்னை திருவல்லிக்கேணி, சிதம்பரம் நடராசர் போன்ற அத்தனை இந்துக் கோயில்களும் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களைத் தஞ்சம்புக அனுமதிக்கவில்லை.
சாதாரண நாட்களில் குழியில் கூட கடவுளால் சாதிவாரியாக "ரகம்' பிரிக்கப்படும் மக்களை இயற்கை ஒரே குழியில் சேர்த்தது. இவ்வளவு இருந்தும் வாழ்க்கை அவலங்களிலிருந்து கற்பனையில் தன்னை விடுவித்துக் கொள்ள மதத்தை மனிதன் பிடித்துக் கொள்கிறான் அது அவனது ஏக்கப் பெருமூச்சாக இருக்கிறது. ஆனால் மதத்தைக் கொழுத்த நிறுவனமாக மாற்றிக் கொள்ளும் மதவாதிகள் எவ்வளவு வக்கிரத்தோடு மனிதனை, உழைப்பாளிகளை நடத்துகிறார்கள்? வரலாறு நெடுகிலும் எத்தனை எடுத்துக்காட்டுகள்? இதோ இன்று நம் கண் எதிரிலேயே நடப்பவை வேறென்ன?
டிச. 26ஆம் தேதி சுனாமி அலையால் வீசி எறியப்பட்டுப் பலியானவர்கள் பல ஆயிரம் பேர். அதற்கடுத்த நாள் எங்கெங்கோ சிதறிப் புதைந்து கிடந்த உடல்களைத் தேடி எடுத்துக் கொண்டிருந்தார்கள் சுற்றத்தார். அதே நாளில் சிதம்பரம் சிவனுக்கு சரியாகப் பகல் 2.15 மணிக்கு ஆருத்ரா தரிசனம்.
கடலூரில் 50 கிராமங்கள் முற்றிலும் அழிந்து தேவனாம்பட்டினம், சிங்காரத் தோப்பு, தாழங்குடா, புதுக்குப்பம், புதுப்பேட்டை, பின்னத்தார் போன்ற மீனவக் கிராமங்களில் புதையுண்ட 500 பிணங்களை பொக்லைன் போட்டுத் தோண்டி எடுக்கிறார்கள் அதேநேரம் அம்பாளுக்கு லட்சார்ச்சனை. திருவாடனைச் சாமிக்கு அலங்காரம் முத்துப்பல்லக்கு கடலூர் எஸ்.பி. பன்னீர் செல்வம் என்.எஸ்.எஸ்., என்.சி.சி. மாணவர்கள் சகிதம் வந்து ஆஜராகிப் பலத்த பாதுகாப்பு கொடுக்கிறார் சாமிக்கு ஊர் முழுக்க விடுமுறை அறிவிக்கப்படுகிறது. கடலூர் முழுக்க ஒப்பாரி சிதம்பரம் முழுக்க நாதசுரக் கச்சேரியோடு பஞ்சமூர்த்தி வீதி உலா.
அருகே சென்னை மெரீனா, பட்டினப்பாக்கம், ராயபுரத்தில் சுமார் 400 பேர் இறந்து கிடக்க, திருவல்லிக்கேணி, மயிலையில் விஷ்ணுகோயிலில் திருப்பாவை சொற்பொழிவு ""உன்பணி என்றும் செய்ய எனக்கு நீ அருளுவாய்'' என்று நம்மாழ்வார் பாசுரங்கள் பாடப்படும் பத்துநாள் "இராப்பத்து' (இரவு ஓதுதல்) விழா. குறையொன்று
மில்லாமல் நடக்கிறது.
"கடவுள் மக்களைத் தண்டித்து விடுவார்' என்று யாரும் சொல்லமாட்டார்கள் என்று தான் நாம் நினைப்போம். ஆனால் அந்த எல்லைக்கும் இந்துவெறியர்கள் போவார்கள்.
""இந்துமதத்தை அழிக்க முயன்றதால் கடல் கொந்தளிப்பு'' என்று ஜெயிலுக்குப் போன கிரிமினல் ஜெயேந்திரனுக்கு ஆதரவாக (தினத்தந்தி, 28.12.04) விசாகப்பட்டினம் சாரதாபீடம் மடாதிபதி ஜகத்குரு சங்கராச்சாரி ஸ்வரூபானந்த இந்திர சரஸ்வதி திமிரோடும் கொழுப்போடும் அறிக்கை விட்டிருக்கிறார்.
திருச்சி ஆஞ்சநேயர் கோயில் சுவரில், இதேபோல 26.12.04 அன்று மாலை கரும்பலகையில் விசுவ இந்து பரிசத் எழுதியதைக் கண்டித்து ம.க.இ.க. தோழர்கள் 10 பேர் ஆர்ப்பாட்டம் செய்து கைதானார்கள்.
ஜெயேந்திரன் என்ற ஒரு பார்ப்பனக் கொலைகாரனைக் கைது செய்தால் கடவுள் ஒரு லட்சம் கொலை செய்வானா? இப்படி எழுதுகின்ற கேடுகெட்ட பார்ப்பனப் பிறவி, சிதறிக் கிடக்கும் சடலங்களைத் தின்னும் நாகை நாய்களைவிடக் கேவலம்தானே?
இறந்த ஆன்மாக்களின் சாந்திக்கு மோட்சதீபம் ஏற்றச் சொல்கிறது ஜெயில்சாமி ஜெயேந்திரன். வெளியே உற்றம் சுற்றம் இழந்து இளம் பிஞ்சுகளைப் பறிகொடுத்துத் தவிக்கின்ற பல்லாயிரம் குடும்பங்களுக்காக, உயிருடன் உள்ள இந்த ஆன்மாக்களின் சாந்திக்காக ஜெயேந்திரனுக்குத்தான் மோட்சதீபம் ஏற்ற வேண்டும்.
வேலூரை சுனாமி தாக்கவில்லை மனிதர்களைக் கொன்ற சுனாமி மடங்களை அழிக்கவில்லை அந்த வேலையை நமக்காக விட்டு வைத்திருக்கிறது.
""ஒரு மேற்கு ஐரோப்பியனின் மரணம் 12 ஆசிய மக்களின் மரணத்திற்குச் சமம்'' என்கிறார் ஆதம்ஸ் எனும் அறிஞர். உலகின் செய்தி ஊடகங்கள் பேரழிவு குறித்து எவ்வளவு செய்தி அல்லது நேரம் ஒதுக்க வேண்டும் என்று தீர்மானிப்பது அந்த அழிவு தோற்றுவிக்கும் மரணத்தின் எண்ணிக்கையைப் பொறுத்ததுதான் என்கிறார் அவர். இதன்படி தற்போது ஒரு லட்சம் சாவுகளை நெருங்கி வரும் ஆசிய சுனாமியலையின் அழிவு 8500 ஐரோப்பியர்களின் உயிர்களுக்குச் சமம். அந்த அளவே செய்தி முக்கியத்துவம் பெறும்.
போர், இயற்கைப் பேரழிவின் மூலமே உலக செய்திச் சானல்கள் பிரபலம் பெறுகின்றன. 91 இராக் ஆக்கிரமிப்பை வைத்து சி.என்.என். தொலைக்காட்சி உலகச் சந்தையைப் பெற்று வரு மானத்தை 150 சதவீதத்துக்கு அதிகப்படுத்தியது. அதன் பிறகு பி.பி.சி. தற்போதைய சுனாமி அழிவை வைத்து சன் டி.வி. தென்னிந்திய அளவிலும், என்.டி.டி.வி அகில இந்திய ஆங்கிலச் சந்தையையும் முழுமையாகக் கைப்பற்றக் கூடும். ஒருநாட்டின் தேசியத் துயரம் ஒரு செய்தி நிறுவனத்தை லாட்டரிப் பரிசு போல மகிழ வைக்கிறது.
ஆசியச் சந்தையைக் கைப்பற்றும் போட்டியில் சி.என்.என்ஐ வென்றுவிட்ட பிபிசி, 26 ஞாயிறன்று சுனாமி நில நடுக்கச் செய்தியை இடைவெளியின்றி தொடர்ந்து ஒளிபரப்பியது. தெற்காசிய நாடுகளின் அழிவு மொத்தமாக அளிக்கப்பட்ட நேரத்தில் மாலே, பினாங்கு, புக்கெட், காலே நகர்களில் உயிர் தப்பிய பிரிட்டிஷ் பயணிகளின் தனிக்கதைகள் நேரடியாக ஒளிபரப்பப்பட்டன.
ஈராக் ஆக்கிரமிப்பின்போது அமெரிக்க இராணுவத்துடன் பல செய்தியாளர்களை அனுப்பி லண்டன் மைய ஒளிபரப்பையே ஈராக்கிற்கு மாற்றிய பிபிசி, தெற்காசிய அழிவுகளுக்கு ஒரு நாட்டுக்கு ஒரு செய்தியாளரை மட்டுமே பயன்படுத்தியது. தனது இணையத் தளத்தில் பிரிட்டிஷ் சுற்றுலா பயணிகளின் உறவினர்களுடைய கவலைகள் மற்றும் கேள்விகளுக்குப் பதிலளிக்க லண்டன் வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கென்றே ஒரு செய்தியாளரை நியமித்து ஒரு மணிக்கொரு தடவை ஒளிபரப்பியது.
27ம் தேதி ஆசிய அழிவை தலைப்புச் செய்தியாக மட்டும் காட்டிய பி.பி.சி, தனது வழக்கமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பியது. இலங்கையில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் கார், ரயில், பேருந்துகள் அடங்கிய காட்சியை முடித்து வந்த மகிழ்ச்சியில் லேண்ட் ஓவர் எனும் அதிநவீன கார் மலை, மேடு, பள்ளம், சகதியில் எப்படி சொகுசாக பயணம் செய்கிறது என்பதை 20 நிமிடம் விளக்கியது. வெள்ளக் காட்சிகளால் ஊறும் சோகத்தை ஒரு ஆடம்பர வாகனத்தின் பார்வை வழியாக அறிவிக்கிறது. காட்சி உலகின் வக்கிர விளைவு இதுதான்.
97இல் மரணமடைந்த கேளிக்கைச் சீமாட்டி டயானாவின் இறுதி ஊர்வலம் 10 லட்சம் பேருடன் 3 மைல் நீளத்தில் நடந்ததை 25 கோடி மக்கள், 200 நாடுகளில் 44 மொழிகளில் பார்த்தனர். உலக வரலாற்றில் அதிகம்பேர் பார்த்த நிகழ்ச்சியாம் இது. ஒரு இலட்சம் பேர் பலியாகி பல இலட்சம் பேர் வீடிழந்து, கோடி மக்கள் அலறும் தெற்காசியக் காட்சிகள் ஓரிரு நிமிடங்களில் புள்ளி விவரமாய் வந்து போகின்றன. உலக மீடியாவின் வக்கிர தருமம் இதுதான்.
என்றாலும் உள்நாட்டிலும் அந்த தருமம் மாறிவிடவில்லை. 26ஆம் தேதியன்று சுனாமி அழிவையும் 27இல் அம்பானி விவகாரத்தையும் ""பிரேக்கிங் நியூசாக'' என்.டி.டி.வி வெளியிட்டது. ஒரேநாளில் சுனாமி பின்னுக்குப் போய் அம்பானி முன்னுக்கு வந்த காரணம், ரிலையன்ஸ் பங்குகள் கோலோச்சும் பங்குச் சந்தையில் என்டிடி.வியின் பங்குகளும் இருக்கின்றன. 26இல் தமிழகத்தில் சாவுகள் 4000 எனவும், 27இல் ""கருணாநிதி உடல்நிலை குறித்து போலீசு விஷமப் பிரச்சாரம் ஆற்காடு கண்டிப்பு'' எனவும் சன் டி.வி. "ஃப்ளாஷ் நியூஸ்' வெளியிட்டது. சில ஆயிரம் உயிர்கள் போய், பல ஆயிரம் ஜீவன்கள் அலறும் நேரத்தில் சன் டி.வி.யின் விசேடக் கவலை ஒரு அருவெறுப்பின்றி வேறென்ன?
""அங்கே லேட்டஸ்ட் நியூஸ் என்ன?'' இது சுனாமி அழிவு குறித்து பிபிசி முதல் சன் நியூஸ் வரை செய்தி படிப்பவர்கள் செய்தி சேகரிப்பவர்களிடம் கேட்ட கேள்வி. மேலும் பேரழிவின் துயரத்தையோ அதன் பரிமாணத்தையோ எப்படி உணர்த்துவது என்பதல்ல அவர்கள் கவலை. சுனாமி அலையின் பிரம்மாண்டத்தை எப்படிக் காட்டுவது என்று கடல் கொந்தளிப்பின் போது எடுக்கப்பட்ட முதல் காட்சிகளுக்காக அவர்கள் அலைந்தார்கள். பினாங்கு நகரின் சுற்றுலாப் பயணி ஒருவர் தற்செயலாக எடுத்த காட்சி இவர்களுக்குக் கிடைத்தவுடன் அடித்தது லாட்டரி. உலகம் முழுவதும் பல முறை அந்தத் தத்ரூபமான காட்சி ஒளிபரப்பப்பட்டது.
பிணங்களின் நடுவே வற்றிய கண்ணீருடன் இடைவிடாது அழுது அரற்றிய பெண்களின் கதைகள் அவர்களது ரசனைக்கு ஈடுகொடுக்கவில்லை.
அடுத்து கிரிக்கெட்டின் ஸ்கோர் போல உடல்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை விறுவிறுப்புடன் காட்டினர். டிடி நியூஸ், ஹெட்லைன்ஸ் டுடே, என்.டி.டி.வி போன்ற சானல்களின் கீழ்ப் பத்தியில் விப்ரோ, டி.வி.எஸ். எஸ்கார்ட்ஸ், ரிலையன்ஸ், கோத்ரெஜ், கில்லெட், இந்தியா சிமெண்ட்ஸ், மாருதி, சத்யம், போன்ற நிறுவனங்களின் பங்கு மதிப்பின் ஏற்ற இறக்கமும், மேலே நாகை, கடலூர், ஆந்திரா, அந்தமான், இலங்கை, இந்தோனேசியாவின் உடல் எண்ணிக்கை அதிகரிப்பதும், ஒரே நேரத்தில் காட்டப்பட்டன. இதற்குப் பொழிப்புரை தேவையில்லை.
சென்னையின் கரைகளில் பிணங்கள் ஒதுங்கத் தொடங்கியதை முதலில் படம்பிடித்த சன் டிவி, அதை "மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், இதய பலவீனம் உள்ளவர்கள், பெண்கள், குழந்தைகள் பார்க்க வேண்டாமெ'ன அடிக்கடி கேட்டுக் கொண்டது. ஆனால் இந்தச் செய்தி நிகழ்ச்சிகளின் போது விளம்பரங்களுக்கு மட்டும் குறைவில்லை.
மாற்றுடையின்றி மக்கள் முகாமில் தவிப்பதைக் காட்டியவுடன், "பட்டு சேலைக் காத்தாட, மனசு கூத்தாட' ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ் அழைத்தது. வீடே அடித்துச் செல்லப்பட்ட காட்சிக்குப் பிறகு ""அமெரிக்க முத்திரையுள்ள பிரீமியரை விடுத்து வேறு தரக்குறைவான குக்கரை வாங்குவேனா?'' என்ற ஆலோசனை வந்தது. மகள் திருமணத்திற்குக் குருவி போல சேர்த்து வைத்த தங்கத்தை கடல் எடுத்துக் கொண்ட செய்திக்குப் பின் ""தங்கக் குருவி எங்க வீட்டுக்கு வருவாயா?'' என்று சரவணா ஸ்டோர்ஸ் நகை மாளிகைக்காக மன்மத ராசா சாயாசிங் பாடுகிறார். சகதி, தெரு, மரம், மருத்துவமனைகளில் இறைந்து கிடக்கும் பிணங்களைக் காட்டிய உடன் ""ஸ்லீப்வெல் ஹாலிடே மெத்தை அதிக பரவசம் தருவது'' நினைவூட்டப்படுகிறது.
இந்த எதிர்மறைக் காட்சிகளின் வக்கிரம் டிவியில் மட்டுமல்ல, ஹிந்து முதல் தினத்தந்தி வரையிலான நாளிதழ்களிலும் அப்படித்தான் வெளிவந்தன. நாளிதழ்களில் மட்டுமல்ல, சமூகத்தின் நடவடிக்கைகளும் அப்படித்தான் இருந்தன.
மெரினா முதல் காசிமேடு வரை கடற்கரையே இழவுக் கரையாக மாறியிருந்த போதும் டிசம்பர் சங்கீத சீசன் நிகழ்ச்சிகள் நிறுத்தப்படவில்லை. நாரதகான சபா, இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ், நுங்கம்பாக்கம் கல்சுரல் அகாதமி, முதலியவற்றில் சின்மயா, டி.எம்.கிருஷ்ணன், உன்னி கிருஷ்ணன், குன்னக்குடி, ஊர்மிளா சத்திய நாராயணன், ஜேசுதாஸ் போன்றோர் ஆடினர், பாடினர், வயலினை மீட்டினர். சென்னையின் இந்த நீரோக்களுக்கு மத்தியில் நீரோ சக்கரவர்த்தி எஸ்.வி.சேகர், தனது அல்வா, மெகா வசூல், பெரியதம்பி சின்னதம்பி, குழந்தைசாமி முதலான நகைச்சுவை நாடகங்களை நடத்தினார். 500 1000 கொடுத்து அரங்கம் நிறைந்து சிரித்துக் கலைந்தவர்கள் பலர்.
""என்னப் பெத்த அம்மா, என்னப் பெத்த தங்கம்'' என ஆயிரக்கணக்கில் பெண்கள் வெடித்து அழுத அதே நேரத்தில்தான் மேற்கண்ட கலை உபாசனைகள் நடந்திருக்கின்றன. இத்தகைய அருவெறுப்பான சமூகத்தில் வாழ்வதற்குப் பதில் அந்த சுனாமியில் நாமும் இறக்கவில்லையே என்பதைத் தவிர எதையும் நினைக்க முடியவில்லை.
26இன் சுனாமி சோகத்தைவிட டாக்காவில் வங்க தேச அணியிடம் தோல்வியடைந்த இந்தியாவிற்காகக் கவலைப்பட்டவர்கள் அதிகம். டி.வி.யில் அதிக இந்தியர்கள் அன்று கிரிக்கெட் போட்டியைத்தான் பார்த்தார்கள். காரணம் சுனாமியின் கொடூரங்களை நினைத்துப் பார்க்கும் அளவுக்கு அவர்கள் இதயம் "வலுவானதில்லை'. மெரினா முதல் குளச்சல் வரை கிரிக்கெட் ஆடிய மீனவச் சிறுவர்கள் பலியாகியிருக்கிறார்கள். இப்படி ஒரு பித்தைப் பரப்பிய "கொலைகார' இந்திய அணி, ஜட்டி முதல் தலைக்கவசம் வரை பன்னாட்டு நிறுவனச் சின்னங்களைப் பொறித்திருக்கும் அந்த தேசபக்த சிங்கங்கள், 27ம் தேதி 2 நிமிடம் அஞ்சலி செலுத்திவிட்டுப் போட்டியை ஆரம்பித்தார்கள். ஆம். 26ம் தேதி இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட மக்களைப் பலி கொடுத்த இந்தியாவில் எந்த ஒரு இயக்கமும் நிற்கவில்லை.
அறியாமல் கொன்ற சுனாமியின் அழிவை, அந்த அழிவின் சோகத்தை, அலறலை, ஈவு இரக்கமின்றிக் கொன்ற இந்தியாவின் இத்தகைய இயக்கத்தில் உங்களின் பங்கு என்ன? உண்மையைப் பரிசீலியுங்கள்.
வீரம்
காட்டில் வாடிய வீரப்பனை சதிராட்டம் ஆடி பிடித்துக் கொன்றது அதிரடிப்படை. ஸ்காத்லாந்து யார்டு அல்ல, தமிழக காவல் துறைதான் வீரத்தில் முதலிடமென்று உச்சிமோந்து கோடிகளில் பரிசளித்தார் ஜெயலலிதா. அதிரடிப்படையின் "ஆபரேசன் குக்கூனை' (பட்டுப்புழுக் கூடு) அட்டைப்படக் கட்டுரை மூலம் புல்லரித்த பத்திரிகைகள் விஜயகுமார், வெள்ளைத் துரை, டிரைவர், செந்தாமரைக் கண்ணன் போன்ற "வீரர்களின்' கதைகளைப் பிளந்து கட்டின. ஆனால் சுனாமி அலையில் சின்னாபின்னமாகிய கடற்கரையை இந்த அதிரடிப்படை எட்டிக் கூடப் பார்க்கவில்லை. இவ்வளவிற்கும் அதிரடிப்படை அமைக்கப்பட்டபோது இயற்கை பேரிழப்புகளுக்காகவும் பணியாற்ற வேண்டும் என்பது அதன் அடிப்படைக் கடமைகளில் ஒன்று. அடிப்படையை நிறைவேற்றச் சொன்னால் ஆர்ப்பரிக்கும் அலைகளில் அட்டைக் கத்திகளின் "வீரம்' அம்பலமாகும் என்பதால் அரசு அனுப்பவில்லை. அடர்ந்த காடுகளில் ஆதிவாசிகளை கேட்பார் கேள்வியின்றிக் குதறிய இம்மிருகங்களின் "வீரத்தை'த்தான் ஐயாயிரம் பேரைப் பலிவாங்கிய சுனாமியும் நிரூபித்திருக்கிறது.
கடலோரக் காவல் படை. அமைதிக் காலத்தில் பத்திரிகையாளர்களையும், அதிகார வர்க்கக் குடும்பத்தினரையும் நடுக்கடலுக்கு அழைத்துச் சென்று, கடலில் தத்தளிப்பவர்களை எப்படிக் காப்பாற்றுவது என்பதை மயிர்க் கூச்செரியும் வகையில் நடத்திக் காட்டும் கோமாளிகளின் படை. இவர்களின் கப்பல்கள் அரசுப் பிரதிநிதிகள் களிப்பதற்கான மிதவை விடுதிகள். இராமேசுவரத்தின் மீனவர்களைப் பொறுத்தவரை இவர்கள் வில்லன்கள்.
அலையடித்து ஆழ்கடலுக்குள் பிணங்கள் இழுக்கப்பட்ட இரண்டாம் நாளில் இப்படையின் தென்பிராந்திய அதிகாரி மின்னலடிக்கும் பளீர் சீருடையில் இப்படிச் சொல்கிறார்: ""விசாகப்பட்டினம் முதல் குமரி வரை மீட்புப் பணிக்கான கோரிக்கைகள் வருகின்றன. சென்னைத் துறைமுகத்தில் நின்றிருந்த இரண்டு கப்பல்கள் சேதமடைந்ததால் உடனடியாக உதவ முடியவில்லை. இப்போது எங்கள் கப்பல்களும், ஹெலிகாப்டர்களும் கடலைக் கண்காணிக்கின்றன'' அலையடித்தபோது தத்தளித்த மக்களுக்குக் காவல் இல்லை. ஓய்ந்த போது கண்காணிப்பு! பெயேரா கடலோரக் காவல்படை.
இவர்களது ஹெலிகாப்டர்கள் தூக்கி வந்த பிணங்களும், குற்றுயிர் மனிதர்களும் மெரினா கடற்கரையில் உணவுப் பொட்டலங்கள் போல கொட்டப்பட்டனர். எடுத்துக் காப்பாற்றியவர்கள் மீனவர்கள். மக்களும், மீனவர்களும் வாழும் தமிழகக் கடற்கரையில் எங்கேயும் ஹெலிகாப்டர் தரையிறங்கும் தளம் கிடையாது. தளமெல்லாம் தங்கத் தலைவிக்கும், தியாகத் தலைவிக்கும் மட்டுமே. சுனாமியின் அடுத்த சில மணிநேரங்களில் இவர்கள் இயங்கியிருந்தால் பலரைக் காப்பாற்றியிருக்க முடியும். செய்யவில்லை. அறியாமல் கொன்றது சுனாமி. அறிந்தே கொன்ற கடலோரக் காவல் படையை என்ன செய்யலாம்?
இந்திய இராணுவம். உலகின் நான்காவது பெரிய படை. ஜெய் ஜவானின் வீரதீரங்கள் கார்கிலின் போதும், இந்தி சினிமா சீரியல் மூலமும் பறைசாற்றப்பட்டவை. ஆயினும் உண்மையோ மாறானது. கார்கில் போரில் பதக்கம் பதவி உயர்விற்காக வெற்றியை சினிமா போலப் புனைந்து தலைமைக்கு அனுப்பிய மேஜர் சுரீந்தர் சிங் பதவி நீக்கம் செய்யப்பட்டு மூன்றாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார். இந்திய வரைபடத்தின் ஒரு அங்குலத்தைக் கூட பாகிஸ்தான் கைப்பற்றிவிடக் கூடாது என்பதற்காக கார்கில் போரில் ஒரேநாளில் பல லட்சம் வீரர்கள் நாடெங்கிலுமிருந்து குவிக்கப்பட்டார்கள்.
ஆனால் ஒருதேசத்தின் உயிரென வாழும் மக்கள் சில ஆயிரம் பேர் கொல்லப்பட்ட போதும் இராணுவம் வரவில்லை. தேசிய இனங்களை ஒடுக்குவதற்காக வடகிழக்கில் பல்லாண்டுகளாகக் குடியிருக்கும் இராணுவம், தென்கிழக்கில் ஒரு தேசிய இனம் உயிரை விடும் போதும், விட்ட பிறகும் வரவில்லை. மக்களின் உடல்கள் அழுகிய தக்காளிகளைப் போல பெருங்குழியில் கொட்டப்பட்டுப் புதைக்கப்படும் இரண்டாம் நாளில் கல்பாக்கம் அணுஉலையைக் காக்க ஜம்மு காசுமீர் சிறப்பு ஆயுதப் பிரிவும், நாகைக்கு மதராஸ் பொறியியல் படைப்பிரிவும் வந்தன. நாகைக்கு பொறியியல் பிரிவு எதற்கு? அரசுத் தலைவர்கள் வசதியாக வந்து போக சாலைபாலங்களைச் செப்பனிட!
இந்திய இராணுவம் ஒரு மக்கள் இராணுவமில்லைதான். இருப்பினும் 80களில் செய்து வந்த இயற்கை துயர் நிவாரணப் பணிகள் கூட இன்று இல்லை. ஏனெனில் இது உலகமயமாக்கலின் இராணுவம். ஜம்மு காசுமீரில் பரவியிருக்கும் இந்திய இராணுவத்தின் போர் உணர்ச்சியைத் தூண்டச் செய்வது தேசபக்திக் கதைகளல்ல. ஷாருக்கான், ஐஸ்வர்யாராய் முதலான கனவுத் திரை வெண் தோல்கள் துருப்புகளுடன் கும்மாளமிட்டுக் குஷிப்படுத்துகின்றன.
இந்தக் குஷியான படித்த இளைய தலைமுறையை இராணுவத்திற்குள் கவர்ந்திழுக்கவும் தேசபக்தி உதவாது. சில ஆண்டுப் பணிக்குப் பின் இவர்கள் தனியார் பன்னாட்டு நிறுவனங்களில் சேருவதற்கு அனுமதிக்கப்படவிருக்கிறார்கள். ஏற்கெனவே ஒடுக்குமுறை நிறுவனமாக இருந்த இராணுவம் சுனாமிக்கு முன்பே உலகமயமாக்க அலையால் களிவெறி இராணுவமாக மாறிவிட்டது. இது ஈராக்கில் வெறியாட்டமும், களியாட்டமும் போடும் அமெரிக்கத் துருப்புகளின் அலைவரிசையில் சேர்ந்துவிட்டது. உயிரைக் கொல்லும் சுனாமியைவிட, அணுஅணுவாய் வதைக்கும் அபுகிரைப்பின் பேரழிவு அபாயம் நிறைந்தது.
இதுபோக விமானப்படை. இப்படையின் சாகச சர்க்கஸ் நிகழ்ச்சியை மெரினா கடற்கரையில் நடத்திய சூரிய கிரண் குழுவினருக்கு ஜெயா அரசு மொய் எழுதிய தொகை 50 இலட்சம். பேரலையால் வாழ்விழந்த மக்கள் காப்பாற்றுமாறு கதறியபோது, இந்த வேடிக்கைச் சூரியன் உதிக்கவில்லை ஒளிந்து கொண்டது.
விஜயகுமாரின் அதிரடிப்படை முதல் விமானப்படை வரை உண்மை நிலை இப்படியிருக்க இனிவரும் மாதங்களில், சுனாமி அழிவில் இவர்களாற்றிய சாகசங்கள் இந்தி தமிழ் சினிமாக்களில் புனையப்படலாம். புஷ் வெற்றியைக் கொண்டாடும் விதத்தில், ஈராக்கின் பலூஜா நகரத்தின் 3 லட்சம் மக்களை வெளியேற்றி விட்டு, நகரத்தை குண்டு வீசி பொட்டல்காடாக்கிய பிறகு அமெரிக்க இராணுவம் "வெற்றி வீரர்களாக' ஜெனரல் ஜிம்மேட்டிஸ் தலைமையில் நுழைந்தது. இந்த கொலை கேலிக் கூத்தை ஹாலிவுட்டின் யுனிவர்சல் ஸ்டூடியோ நிறுவனம் நடிகர் ஹாரிசன் ஃபோர்டை மேற்கண்ட மேஜராக நடிக்க வைத்து 2005இல் திரையிடப் போகிறதாம். அட்டைக் கத்தியின் அருவருப்பை இத்துடன் முடிப்போம்.
வீரம். இதுமட்டுமே வீரம். சக மனிதர்களைக் காப்பாற்ற எதை, எப்படி, எப்போது செய்ய வேண்டுமோ அவற்றை தன்னுயிரைப் பணயம் வைத்து செய்தவர்கள் கீழ்க்கண்ட போராளிகள். இவர்களில் சிலர் இறந்து விட்டனர். பலரின் பெயர் கூட எமக்குத் தெரியாது. அர்ஜூனா விருதும், அட்டைப்படக் கவுரவமும் வாய்க்கப் பெறாத இந்த எளிய, அழகான மனிதர்கள் சுனாமியின் பிரம்மாண்டத்தை எதிர்த்துப் போராடினார்கள். சென்னை, கடலூர், நாகை, சீர்காழி வரை நிவாரண முகாம் அமைத்துப் பணியாற்றும் எமது தோழர்கள் சேகரித்துக் கொடுத்த சில வீரத் தருணங்கள், இந்த மக்கள்தான் புரட்சி செய்வார்கள் என்பதை உங்களுக்கு உணர்த்தக் கூடும்.
சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம். கடலால் உருத்தெரியாமல் குலைக்கப்பட்ட ஒரு மீனவர் குடியிருப்பு. அசோக் குமார், கடலுழைப்பால் உரமேறிய இருபது வயது இளைஞர். பாம்பைப் போல சீறிக் கொண்டு வந்தது அலை. மக்கள் தலைதெறிக்க தப்பி ஓடியபோது இவர் ஒரு கணம் நின்றார். சில இளைஞர்களை சேர்த்துக் கொண்டு தத்தளித்த சிலரை ஒரு மூலைச் சாலையில் கரையேற்றினார்.
ஒரு கணம் யோசித்தார். உடன் அவரது குழுவினர் மிதந்து வந்த கூரைக் கம்புகளைச் சேர்த்தனர். மிதப்பவர்களிடம் வீசினர். ""உஷாரா ஒரப்பா நில்லு, ஊன்றி நில்லு, தண்ணி போக்குல ஓடாதே, தெம்பா இரு, தம் கட்டி வா'' அசோக் குமாரின் ஆணைகள் அருமையாக வேலை செய்தன.
நூற்றுக்கணக்கான விலைமதிப்பற்ற மனித உயிர்கள் காப்பாற்றப்பட்டன. பின்பு வீடு நினைவுக்கு வர குதித்து நீந்தினார். அதற்குள் அவரது குடும்பம் பாதுகாப்பாக நீந்தி அருகாமைக் குடியிருப்பில் கரையேறி விட்டனர். நொறுக்கப்பட்ட வீட்டில் தத்தளித்த தாயை தோளில் போட்டு நீந்தினார். அதன்பிறகு பல மணி நேரம் உயிரையும் பின்பு உடல்களையும் காப்பாற்றியது அவரது குழு. அவர்களது உடலிலே காயங்களும், தோளிலே கடுமையான வலியும் இருந்தபோதும் "மற்ற உயிர்களைக் காப்பதற்கே எங்கள் உயிர்' என்ற உண்மை அவர்கள் முகத்தில் களையுடன் ஒளி வீசுகிறது. இந்த முயற்சிகளில் ஈடுபட்டுப் பலரைக் காப்பாற்றிய வீரமணி என்ற இளைஞர் தனது கடைசி முயற்சியில் அலையில் சிக்கி உயிர் துறந்து விட்டார். ""மற்றவர்களைப் பற்றி கவலைப்பட்ட வீரமணிக்கு தன் உயிரைப் பற்றி கவலையே கிடையாது'' என்று அவரது நண்பர்கள் இன்னமும் கதறுகிறார்கள்.
வயதான கஸ்தூரி அம்மாளைக் காப்பாற்றிய சேகர். நான்கு பேரைக் காப்பாற்றிய ராஜேஷ். சிறுவர் சிறுமியரைக் காப்பாற்றிய சின்னப் பையன் மற்றும் அகஸ்டின், மோகன். ""சீனிவாசபுரத்துல எத்தனையோ பேரைக் காப்பாத்துனோம். அவரு, இவருன்னு எண்ணித் தீராதுங்க. நாங்க ஒருத்தரை ஒருத்தர் காப்பாத்துனோம். மீனவர்களை மட்டுமில்ல, இங்க வாழற மத்த குடும்பங்களையும் காப்பாத்தினோம். இது எங்களுக்கு ரத்தத்தோடு ஊறின பழக்கம்'' என்கிறார் சின்னபையன்.
கடலூர் தேவனாம்பட்டினம். சீனிவாசன் கடலூர் நகராட்சியின் டிராக்டர் ஓட்டுநர். 26ஆம் தேதி மீட்பு வேலைக்குச் சென்றபோது சிதறிக்கிடந்த பிணங்களை அப்புறப்படுத்த பலர் தயங்கினர். இவரும் இவரது நண்பர்களும் உடல்களை டிராக்டரில் போடும்போது, பிணக்குவியலில் கிடந்த ஒரு சிறுவனின் கடைவாயில் நுரை வழிந்திருக்கிறது. பதறிய சீனிவாசன் சிறுவனின் வயிற்றை அழுத்தி தட்டாமாலை போல சுழற்றினார். கடல் நீரைக் கக்கிய சிறுவன் விழித்துக் கொண்டான். நீரில் தத்தளிக்கும்
மக்களைக் காப்பாற்றிய இளைஞர்களின் ஆவேச உணர்ச்சி, பிணங்களை அகற்றும் இந்த "அருöவறுப்பான' வேலையில் ஈடுபட்ட சீனிவாசனிடமும் இருந்தது. இல்லையேல் விழித்த இந்த சிறுவன் ஏதோ ஒரு குழியில் புதையுண்டிருப்பான்.
தேவனாம்பட்டினத்தின் விக்ரமாதித்தன். அலையடித்தபோது ஒரு வீட்டின் முன் கதவை உடைத்துச் சென்ற வெள்ளம் பின் கதவை பிய்த்துக் கொண்டு வெளியேறியது. உள்ளே ஒரு ஆள் உயர வெள்ளத்தில் சிக்கிய பெண்ணின் அலறல். அஞ்சாத விக்கிரமாதித்தன் தன் நண்பருடன் ஒரு படகில் சென்று அந்தப் பெண்ணையும், அருகாமையில் மூச்சுத்திணறலுடன் தத்தளித்த வேறு சிலரையும் காப்பாற்றினார்.
கடலூர் சாமியார் பேட்டையின் அருள். தனது மீன் வலையைச் சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது கடற்கரையிலிருந்தவர்கள் மீன் வாங்க வந்த மீனவப் பெண்கள். தமிழகக் கடற்கரையைச் சூறையாட 2000 கி.மீட்டர் பயணம் செய்து வந்த அந்த அலை இங்கேயும் பாய்ந்தது. கவிழ்த்து தூக்கி வீசப்பட்ட அருள் ஒரு கணத்தில் தன் அடியையும் வலியையும் மறந்து சுதாரித்துக் கொண்டு வயதான தாயைத் தன் தோளிலேந்தி ஒரு மேட்டில் சேர்த்தார். அருகில் இருந்த சிறு படகில் ஏறி ஒரு தென்னமட்டையைப் பிடித்து கையை நங்கூரமாக்கி, படகு வெள்ளத்தில் அடித்துச் செல்லாமல் பார்த்துக் கொண்டு அலை அடித்துச் சென்ற இரு பெண்களைக் காப்பாற்றினார். பின்பு வெள்ளத்தின் போக்கிலேயே படகைச் செலுத்தி மேலும் மூன்று பேரைக் காப்பாற்றினார்.
கடலூர் புதுக்குப்பத்தைச் சேர்ந்தவர் தேவதாஸ் என்ற தீபாவளி. இங்கே அலை மீண்டும் மீண்டும் அடித்தது. வலையில் கழுத்து சிக்கிய மீனவர் ஒருவர் மூச்சுத் திணறிய போது தீபாவளி முக்குளித்து அவரைக் காப்பாற்றினார். பின்னர் நீச்சல் தெரியாதவர்கள், காலில் அடிபட்ட பெண்கள் என ஐவரை இரு கரங்களால் அணைத்து வெள்ளத்தின் எதிர்த்திசையில் மூச்சுப்பிடித்து தரையில் எம்பி எம்பிக் குதித்து காப்பாற்றினார். 6 உயிர்களை அரும்பாடுபட்டுக் கரை சேர்த்த தீபாவளியின் உடல் சோர்ந்திருந்தாலும் இதயமோ மேலும் காப்பாற்றுமாறு வேகமாக துடித்துக் கொண்டிருந்தது.
ஏழாவது உயிரைக் காப்பாற்ற மீண்டும் கடலில் குதித்த அந்தக் காளை அதிவேகமாய்த் திரும்பிய வெள்ளத்தில் இழுபட்டு ஒரு பள்ளத்தில் மாட்டிக் கொண்டது. பிறகு திரும்பவில்லை. தீபாவளியின் உடல் மறுநாள்தான் பிணமாக கரை திரும்பியது. அப்போதும் இன்னும் எத்தனை பேரைக் காப்பாற்ற வேண்டும் என்று கேட்பது போல அவரது இரு கைகளும் விரிந்திருந்தன. அவரால் காப்பாற்றப்பட்ட அந்த அறுவரும் தீபாவளிக்காக இன்னும் அழுகிறார்கள்.
நாகை மாவட்டம் அக்கரைப்பட்டு கிராமம். 1500 பேர் மக்கள் தொகையில் 500 பேரைக் கடலுக்குக் காவு கொடுத்த மயான கிராமம். பேரலை ஒரு மலைப்பாம்பைப் போல விழுங்கிய நேரத்தில் பழனிச்சாமி தன் மனைவி, குழந்தையை மிகுந்த சிரமத்துடன் காப்பாற்றினார். பிறகு அந்த ஊரில் உயிருடன் எஞ்சிய மக்களுடன் பழனிச்சாமியின் மனைவியும், குழந்தையும் திருவாரூர் முகாமுக்குச் சென்று விட்டனர்.
பழனிச்சாமி வரவில்லை. காணவில்லை இறந்து விட்டார் என்றஞ்சிய மனைவி அருகாமைக் கரைகளில் தேட ஆரம்பித்து விட்டார். ஆனால் பழனிச்சாமி இறக்கவில்லை. குடும்பத்தைக் காப்பாற்றிய கையுடன் மீன்பிடித் தொழிலுக்குப் பயன்படும் அரைடிராயரைப் போட்டுக் கொண்டு அக்கரைப்பட்டிலேயே சுற்றினார். இரண்டு நாட்கள் இரவு பகலாய், சோறு தண்ணியில்லாமல், தன் கிராம மக்களைக் காப்பாற்ற முடியாதா என்று வெறிபிடித்தவரைப் போல அலைந்து திரிந்தார். கடலை முறைத்தவாறு காத்திருந்தார். ஆயினும் அவரால் சில பிணங்களைத்தான் சேகரிக்க முடிந்தது.
பல கிராமங்களிலும், அவரது பிணத்தைத் தேடி சுற்றியலைந்த அவரது மனைவி இறுதியில் அக்கரைப்பட்டியிலேயே தனது கணவனை உயிருடன் கண்டு சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றார். திருவாரூர் முகாமிலிருக்கும் பழனிச்சாமி இப்போதும் எதையோ முறைத்தவாறுதான் இருக்கிறார்.
சுனாமி வருவதற்கு முன்பு எச்சரிக்கை செய்ய மறந்த வானிலைத் துறை அழிவு நடந்த பிறகு, ""மேலும் இரண்டு நாட்கள் சுனாமி சீற்றம் இருக்கும், யாரும் கடலுக்குப் போக வேண்டாம்'' என எச்சரிக்கை செய்தது. உயிரைக் காப்பாற்ற வராத அரசின் நிர்வாகம், பின்பு பிணங்களை சேகரிக்க முனைந்தபோது இந்த அறிவிப்பினால் மீட்புப் பணிகளையும் நிறுத்தியது. கடலுக்குள் செல்ல காவல்துறையும், தீயணைப்புத் துறையும் மறுத்துவிட்டது. உயிர்களைத் தான் காப்பாற்ற முடியவில்லை, உடல்களையாவது மீட்டெடுத்து அடக்கம் செய்ய வேண்டும் என்று துடித்த கடலூர் மீனவர்கள் பலர், தங்கள் உயிரைப் பணயம் வைத்து படகுகளுடன் கடலுக்குள் பாய்ந்தார்கள். இதையே கொட்டும் மழையில் நாகையிலும், குமரி குளச்சலிலும் நூற்றுக்கணக்கான மீனவர்கள் செய்தனர். இல்லையேல் பல உடல்கள் ஆழ்கடலில் அடித்துச் செல்லப்பட்டிருக்கும் அல்லது அக்கக்காகப் பிய்த்தெறியப்பட்டிருக்கும்.
கன்னியாகுமரியின் பிரபலமான முக்கடல் சங்கமிக்கும் சங்கிலித் துறை. "இந்துக்கள்' புனித நீராடும் படித்துறை. ஐயப்ப பக்தர்கள் 25 பேர் நீராடிய போது பாய்ந்து வந்த சுனாமி அவர்களை இழுத்துச் சென்றது. ஏற்öகனவே பாறைக்குக் கீழே ஆழமும் அலைகள் அதிகமும் இருக்கும். அந்த இடத்தில் நீச்சல் தெரிந்தவர்கள் விழுந்தாலும் பிழைக்க முடியாது. அதனால்தான் சங்கிலி கட்டப்பட்டு அதற்குள்தான் நீராட வேண்டும். பாறைகள் அதிகமிருக்கும் அந்த இடத்தில் சம்பவம் நடந்த உடனே மீனவர்கள் கடலில் குதித்துச் சிலரைக் காப்பாற்றினர். ""என்ன செய்வது என்று தெரியாத நேரத்தில் உயிரை வெறுத்துத்தான் கடலில் குதித்துக் காப்பாற்றினோம்'' என்றார் அவர்களிலொருவர். இதே நேரத்தில் சற்று தூரத்தில் இருக்கும் விவேகானந்தர் பாறையில் 300க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இருந்தனர். அலையடித்த பிறகு அரசு படகுப் போக்குவரத்து ஊழியர்கள் அகன்று விட்டனர். மீட்பவர் யாருமில்லை.
குமரி மாவட்ட எல்லையிலிருக்கும் விஜய நாராயணபுரத்திலிருக்கும் கப்பற்படைத் தளத்திலிருந்து வந்த ஹெலிகாப்டர் பாறையைச் சுற்றி வந்து, உணவு, நீர்ப் பொட்டலங்களை வீசியதே தவிர யாரையும் காப்பாற்ற முடியவில்லை. ஆனல் வந்தார்கள் குமரியின் வீரமிக்க அந்த மீனவர்கள். சிறு படகுகளில் பாறைக்குச் சென்று பத்து, பத்து பேராக மீட்டுக் கொண்டு வந்தனர். பிரம்மாண்டமான விவேகானந்தர், திருவள்ளுவர் சிலை பாறைகளின் பின்னணியில், பேரிரைச்சலுடன் வீசிய கடல் அலையை எதிர்த்து சிறு படகில் பயணிகளை அமர்த்தி நின்று கொண்டே படகைச் செலுத்திய அந்த மீனவர்களின் காட்சி, கோழையைக் கூட வீரனாக்கும்.
இப்படி உயிர் காத்த இந்த மீனவர்கள்தான் விவேகானந்தர் படகுத்துறைக்கு அருகே ஆக்கிரமித்திருக்கிறார்கள் என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், அரசாங்கமும் அவர்களைப் பல்வேறு வகைகளில் தொல்லை செய்து வந்தது. குமரி மாவட்டம் முழுவதும் மீனவர்கள் அனைவரும் கிறித்தவ மதத்தினர்தான். இந்த விவேகானந்தர் பாறைதான் முன்பு குருசடிப் பாறையாக இருந்து 60களில் ஆர்.எஸ்.எஸ்.ஆல் ஆக்கிரமிக்கப்பட்டது. குமரி நகரின் பல பத்து ஏக்கர் நிலங்களை வளைத்து சிறு நகரையே விவேகானந்த கேந்திரம் என்று ஆர்.எஸ்.எஸ். உருவாக்கியிருக்கிறது. இதில் சப்பாத்தியும் வெண்ணெயும் உண்டு கொழுத்து வெள்ளையும் சொள்ளையுமாய்ச் சேவையாற்றும் விவேகானந்த தொண்டர்கள் எவரும் பாறைக்கு வந்த பயணிகளைக் காப்பாற்ற வரவில்லை. அந்தோணிசாமியும், அம்புரோசும்தான் காப்பாற்றினார்கள். மீனவர்கள் பலமணி நேரம் போராடி பயணிகளைக் காப்பாற்றிய பிறகே போலீசு வந்தது.
கேரளத்தின் கொல்லம் நகரருகே இருக்கும் ஆழிக்கல் மீனவ கிராமத்தில் 130 மக்கள் பலியாகினர். அதில் பலர் பெண்கள். காரணம் முதலில் தங்கள் குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டும் என்று முயன்றார்கள். ஆம். தமிழகக் கடற்கரையில் பலியானோரிலும் கணிசமானோர், காப்பாற்ற முயன்றோர்தான். ஒவ்வொரு கிராமத்திலும் வீரமணி, தீபாவளியைப் போன்று பலரும் உயிர் துறந்திருக்கின்றனர்.
நீங்கள் படித்த இத்தனைச் சம்பவங்களும் சுனாமியலை அடித்த ஒரு சில நிமிடங்களில் நடந்தவை. உங்கள் வாழ்க்கையில் ஒரு சில நிமிடங்களில் சாதாரண நடைமுறை வேலைகளைக் கூடச் செய்ய முடியாது. இரண்டு நாட்களாகியும் அசைந்து கொடுக்காத இராணுவம், போலீசை வைத்திருக்கும் நாட்டில் 2 நிமிடங்களில் தன்னுயிரைப் பணயம் வைத்துப் பலரைக் காப்பாற்றியதை நீங்கள் கருதுவது போல மீனவர்கள் ஒரு அரிய செயலாகக் கருதுவதில்லை. சின்னத்தம்பி கூறியபடி தண்ணீரில் தத்தளிப்பவர்களைக் காப்பாற்றுவது ஒரு மீனவனுக்கு இரத்தத்தில் ஊறிய விசயம். அதனால்தான் இந்தப் போராளிகள் தம்மால் காப்பாற்ற இயலாத ஆயிரக்கணக்கான உயிர்களுக்காக இன்னமும் அழுகிறார்கள். வீரத்தையும், தீரத்தையும், சோகத்தையும் சினிமாவிலும், சீரியலிலும் கண்டு மயங்கியிருக்கும் உங்கள் கண்கள் சுனாமி அலையை தீரத்துடன் எதிர்த்துப் போராடிய இந்த மாவீரர்களின் உண்மைக் கதைகளைப் பார்த்தாவது திருந்தட்டும். இந்த வீரத்திற்கு துணி மணி, அரிசி, பணம் மட்டும் கொடுத்து மரியாதை செய்வது அவமானம். குடும்பத்தையும், தொழிலையும் பறிகொடுத்து ஆதரவற்றோராய் இருக்கும் இம்மக்களுடன் ஓரிரு வாரங்களாவது தங்கி நிவாரணப் பணிகள் செய்து கூடவே ஆறுதல் தர முயலுங்கள். பெற்றோரை இழந்து நூற்றுக்கணக்கில் அனாதைகளாக இருக்கும் குழந்தைகளைத் தத்தெடுத்து வளருங்கள். உண்மையான வீரத்திற்கு இதைவிடக் குறைவான மரியாதை செய்வது என்பது சாத்தியமில்லை.
வீரத்தை உரிய முறையில் பாராட்டுவதினூடாகத்தான் வீரத்தின் இலக்கணத்தை நாம் உணர முடியும். ஆம். வீரம் என்பது சக மனிதர்களைக் காப்பாற்ற எதை, எப்போது, எப்படிச் செய்ய வேண்டுமோ அவற்றைச் செய்வதுதான். அவர்கள் செய்திருக்கிறார்கள். நீங்கள்?
""இறைவன் என்னைப் படைத்தனன் - தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே'' என்ற வாக்கிற்கு இணங்க இறைத்தொண்டும் தமிழ்த்தொண்டும் செய்யப் பிறந்தவை. மூவர் தேவாரங்கள், தேனினுமினிய திருவாசகம், இவற்றிற்கான தமிழ்ப்பண்கள் ஆகியவற்றைப் பேணிக் காக்கும் கடமை சைவ மடங்களுக்கு உண்டு.
சேக்கிழார் பாடிய பெரியபுராணத்தில் சாதி வேறுபாடின்றி எல்லாச் சாதிகளையும் சேர்ந்த நாயன்மார்களும் போற்றிச் சிறப்பிக்கப்பட்டதைப் பின்பற்றிச் சாதிப்பாகுபாடு இல்லாத சைவ சமயத்தை வளர்க்கத் தங்களை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டியவை சைவ மடங்கள்.
தமிழ்நாட்டுச் சிற்பக் கலைக்கு உன்னதமான எடுத்துக்காட்டுக்களாகத் திகழும் கோயில்கள் சிதிலமடைந்தபோது உழவாரத் திருப்பணி செய்து அவற்றைப் பேணிக்காக்க வழிகாட்டிய திருநாவுக்கரசரைப் பின்பற்றித் தொண்டு புரிய வேண்டிய கடமை சைவ மடாதிபதிகளுக்கு உண்டு. ஆனால் தமிழகத்தில் உள்ள சைவ மடங்களில் பெரும்பாலானவை மேற்கண்ட கடமைகளைத் தவிர வேறுவேலைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
அண்டைநாடான இலங்கையில் திரிகோணமலையில் உள்ள கோணேசுவரம் கோயில், மன்னாரில் உள்ள திருக்கேதீசுவரம் கோயில் ஆகியவற்றில் உள்ள இறைவர்களைப் பாடி வணங்கினார்கள் சம்பந்தர், சுந்தரர் ஆகியோர். ஆனால் பாடல்பெற்ற அந்தக் கோயில்களும், மற்றும் நூற்றுக்கணக்கான சைவக் கோயில்களும் சிங்கள இனவெறியர்களால் இடித்துத் தகர்க்கப்பட்டபோது சைவமடாதிபதிகள் யோக நித்திரையில் ஆழ்ந்திருந்தனர்.
சைவ சமயத்தைப் பின்பற்றிய ஈழத்தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டபோதும் சைவ மடாதிபதிகள் வாயிருந்தும் ஊமையராக விளங்கினார்கள். சைவ¬ம் தமிழும் தழைக்க வேண்டுமானால் ஈழத் தமிழர்கள் உயிரோடு இருக்க வேண்டும். ஈழத் தமிழினமே அழியுமானால் சைவம் தழைப்பது எப்படி? தமிழ் வளர்வது எப்படி?
தமிழ் மன்னர்களின் ஆணையின் வண்ணம் தமிழ்நாட்டுச் சிற்பிகளால் எழுதப்பட்ட கோயில்களில் தமிழ் நுழையத் தமிழ்ப் பகைவர்கள் தடை விதித்தனர். கோயில்களில் இறைவனைப்பாடி வழிபாடு செய்வதற்காகவே எழுதப்பட்ட தேவார, திருவாசகங்களைத் தீட்டு மொழி எனப் புறந்தள்ளிவிட்டுத் தமிழர்களுக்குப் புரியாத வடமொழியில் வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. சைவ மடங்களுக்குச் சொந்தமான நூற்றுக்கணக்கான கோயில்களிலும் இதே நிலைதான்.
இவற்றுக்கு எதிராகக் குரல் கொடுக்க ¬முன்வராத சைவ மடாதிபதிகள் தங்களின் நீண்ட தூக்கத்தில் இருந்து விழிப்புப் பெற்று அவசர அறிக்கையொன்றைக் கூட்டாக வெளியிட்டுள்ளனர்.
தமிழ்நாட்டுக் கோயில்களில் தமிழிலேயே வழிபாடு நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் அறிக்கையா? அல்ல! அல்ல! அல்லவே அல்ல!
இலங்கையில் இடிக்கப்பட்ட சைவக் கோயில்களைப் புதுப்பித்துக்கட்ட உழவாரப் பணியை மேற்கொண்டு அங்குச் செல்லப் போவதாகக் கூறும் அறிக்கையா?
அல்ல! அல்ல! அல்லவே அல்ல!
பித்தா! பிறை சூடிப் பெருமானே! என நாள்தோறும் சிவனை வழிபட்டு உருகும் நமது மடாதிபதிகள் இப்படியெல்லாம் செய்யப் பித்தர்களா? இறைவன் வேண்டுமானால் பித்தனாக இருக்கலாம். இவர்கள் ஒரு போதும் பித்தர்களாக மாட்டார்கள். அதிர்ச்சியுடனும், அளவிலாத துயரத்துடனும் அவர்கள் கடந்த 17-11-04 அன்று கீழ்க்கண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார்கள்.
தமிழகச் சைவ ஆதினத் திருமடங்களான திருவாவடுதுறை, தருமபுரம், குன்றக்குடி, திருப்பனந்தாள், பேரூர் மற்றும் கவுமார திருமடங்களின் தலைவர்கள் சார்பாகக் குன்றக்குடிப் பொன்னம்பலத் தேசிகர் வெளியிட்டுள்ள அறிக்கை:
மிகப் பெரிய இந்து சமயத்தலைவர் காஞ்சி ஜெயேந்திரரை முன்னறிவிப்பு இன்றி, வக்கீல் இல்லாமல் இரவில் கைது செய்திருப்பது இந்து சமுதாய மக்களுக்கும், இந்து சமயத் தலைவர்களுக்கும் பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளது. ஆயிரத்து 500 ஆண்டுக்கு மேற்பட்ட ஒரு பெரிய திருமடத்தின் தலைவரை, அவர்களுக்குரிய மரியாதையோடு விசாரிக்க வேண்டும். அரசியல்வாதிகளுக்குக் கொடுக்கப்படும் மரியாதை, வசதிகள் கூட அவருக்கு அளிக்கப்படாமல் கைது செய்திருப்பது முறையானதா என்பதைச் சிந்திக்க வேண்டும். சட்டத்தின் ¬முன் அனைவரும் சமம் என்பது உண்மை.
ஆனால், சட்டத்தைப் பிரயோகப்படுத்தும்போது அவர்களுக்குரிய தன்மையையும் இடத்தையும் பொறுத்துச் செயல்பட வேண்டியது மரபு. ஜெயேந்திரர் இந்து சமுதாயத்துக்காக அரும்பாடுபட்டு வருபவர். இந்து மக்களின் பெரும் மதிப்பைப் பெற்றவர். இவருக்கு இந்நிலை ஏற்பட்டது குறித்துப் பெரிதும் வருந்துகிறோம். உண்மையைக் கண்டறிந்து தடம் புரளாமல் நேர்மை தவறாமல் நன்கு சிந்தித்து விசாரணை செய்ய வேண்டும். (தினமணி 19.11.04)
ஆதிசங்கரரின் அத்வைத வேதாந்தத்தைச் சைவத் தமிழர்கள் ஒரு போதும் ஏற்றுக் கொண்டவர்களல்லர். சைவ சித்தாந்தத்திற்கு எதிரிடையானது எனக் கருதினார்கள். ஆதிசங்கரரின் தத்துவத்தை ""மிண்டிய மாயாவாதம் எனும் சண்டமாருதம் சுழித்து அடித்து ஆர்த்தது'' என மாணிக்கவாசகர் குறிப்பிடுகிறார்.
சைவ சித்தாந்த சாத்திரங்களில் மிகச் சிறந்ததான ""சிவஞான சித்தியார்'' எழுதிய அருள்நந்தி சிவாச்சாரியர் ""பரபக்கத்தில் மாயாவாதம்'' என்று சங்கரரின் அத்வைதத்தைச் சாடியுள்ளார். மாயாவாதத்தைப் பின்பற்றும் சங்கராச்சாரிகள் சிவன் கோயில்களில் நுழைவதே தவறு என்பதே உண்மையான சைவர்களின் கருத்து.
ஆனால் சைவக் கோயில்கள் அனைத்தும் சங்கராச்சாரியின் கட்டுப்பாட்டுக்குள் போனபோது ¬முணுமுணுப்புச் செய்யக்கூட முன்வராத சைவ மடாதிபதிகள் பரபரப்புடன் இப்போது அறிக்கை வெளியிடுகிறார்கள்.
""தமிழ்நாட்டுக் கோயில்களில் தமிழ்வழிபாடு கூடாது. வடமொழி வழிபாடே இருக்க வேண்டும்'' எனப் பிடிவாதமாகவும் ஆணவமாகவும் கூறிவரும் ஜெயேந்திரருக்கு ஆதரவாக அவசர அவசரமாக அறிக்கை வெளியிட்டுள்ளனர் சைவமும் - தமிழும் தழைக்க வந்த மடாதிபதிகள்.
அடடா! என்ன கவலை? எத்தகைய அக்கறை? இந்தக் கவலையும் இந்த அக்கறையும் இவர்களிலேயே ஒருவர் கைது செய்யப்பட்ட போது உருவாகாதது ஏன்? சைவமடங்களில் பெரியதும் தலையாயதுமான திருவாவடுதுறை ஆதின இளைய சன்னிதானம் மீது கடந்த ஆண்டு கொலை முயற்சி வழக்குத் தொடரப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். சாதாரண கிரிமினல் குற்றவாளியைப் போலவே அவர் நடத்தப்பட்டார். அவருக்குப்பிணை கிடைக்கவே 8 மாதங்களுக்கு மேலாயிற்று. இவ்வளவுக்கும் கொலை முயற்சிச் சதிக்கு உடந்தையாக இருந்தார் என்பதுதான் அவர் மீதான குற்றச்சாட்டு.
ஆனால் கொலைக்குற்றத்திற்கு ஆளான ஜெயேந்திரரைக் கைது செய்ததன் மூலம் இந்து சமயத்திற்கு ஊறு விளைவிக்கப்பட்டுவிட்டதாக அங்கலாய்க்கும் சைவமடாதிபதிகள் திருவாவடுதுறை இளைய ஆதினம் கொலை முயற்சிக் குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டபோது வாய்மூடிக் கிடந்தது ஏன்? சிவமே எனச சும்மா கிடந்தது ஏன்?
""தமிழைப் பழித்தவனை என் தாய் தடுத்தாலும் விடேன்'' என முழங்கினார் புரட்சிக் கவிஞர். ஆனால் ""தமிழ் நீச பாஷை'' என வாய் கூசாமல் பழித்தவரும், கொடிய கொலைக் குற்றத்திற்கு ஆளானவருமான ஒருவருக்காகக் கண்ணீர் வடிக்கும் சைவ மடாதிபதிகள் தாங்கள் ""சற்சூத்திரர்களே'' என்பதை மீண்டும் உறுதி செய்துள்ளனர்.
(தென்செய்தி டிசம்பர் 01-15 இதழில் வெளியான கட்டுரை)
- பழ. நெடுமாறன்(seide@md2.vsnl.net.in)










