» Publishers, Monetize your RSS feeds with FeedShow: More infos (Show/Hide Ads)
Date: Thursday, 11 Dec 2008 01:04

திருவண்ணாமலை மாவட்டம் வெள்ளாமலை கிராமத்தை சேர்ந்தவர் செல்லன் (வயது 32), விவசாயி. இவருக்கும் கன்னியம்மாள் (25) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர் களுக்கு ரோகிணி (3) என்ற மகளும், இளங்கோ (1) என்ற மகனும் உள்ளனர். செல்லன் அவருக்கு சொந்தமான குடிசை வீட்டின் முன்பு காலியாக உள்ள இடத்தில் மாடி வீடு ஒன்று கட்டி வருகிறார். நேற்று காலை 10 மணியளவில் கன்னியம்மாள் அருகே உள்ள குளத்திற்கு துணி துவைக்க சென்றார்.
சிறிது நேரத்தில் செல்லன் குடிசை வீட்டுக்குள் சென்று தூங்கிக் கொண்டிருந்த மகன் இளங்கோ மற்றும் மகள் ரோகிணி ஆகிய இருவரின் கழுத்தை அறுத்தார். இதில் 2 குழந்தைகளும் துடிதுடித்து இறந்தனர்.
இந்த நிலையில் வெளியில் சென்று இருந்த செல்லனின் தாய் முனியம்மாள் வீட்டிற்கு வந்தபோது குடிசை வீட்டில் இருந்து செல்லன் ரத்தம் சொட்டிய கத்தியுடன் வெளியே வந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது அங்கு 2 குழந்தைகளும் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடப்பது கண்டு கதறி அழுதார். அதைத்தொடர்ந்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் சத்தம் கேட்டு உடனடியாக அங்கு வந்தனர். பின்னர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று பிணங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுதொடர்பாக செல்லனை கைது செய்து விசாரணை நடத்தினர்.
`தான்கட்டிவரும் புதிய வீட்டில் நன்றாக வாழவேண்டும் என்றால் குழந்தைகளை பலி கொடுக்க வேண்டும் என்று காளி தன் மீது இறங்கி கூறியதன் பேரில் குழந்தைகள் இருவரையும் பலி கொடுத்தேன்' என்று செல்லன் கூறுவதாக போலீசார் தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினத்தந்தி செய்தி!
சிறிது நேரத்தில் செல்லன் குடிசை வீட்டுக்குள் சென்று தூங்கிக் கொண்டிருந்த மகன் இளங்கோ மற்றும் மகள் ரோகிணி ஆகிய இருவரின் கழுத்தை அறுத்தார். இதில் 2 குழந்தைகளும் துடிதுடித்து இறந்தனர்.
இந்த நிலையில் வெளியில் சென்று இருந்த செல்லனின் தாய் முனியம்மாள் வீட்டிற்கு வந்தபோது குடிசை வீட்டில் இருந்து செல்லன் ரத்தம் சொட்டிய கத்தியுடன் வெளியே வந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது அங்கு 2 குழந்தைகளும் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடப்பது கண்டு கதறி அழுதார். அதைத்தொடர்ந்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் சத்தம் கேட்டு உடனடியாக அங்கு வந்தனர். பின்னர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று பிணங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுதொடர்பாக செல்லனை கைது செய்து விசாரணை நடத்தினர்.
`தான்கட்டிவரும் புதிய வீட்டில் நன்றாக வாழவேண்டும் என்றால் குழந்தைகளை பலி கொடுக்க வேண்டும் என்று காளி தன் மீது இறங்கி கூறியதன் பேரில் குழந்தைகள் இருவரையும் பலி கொடுத்தேன்' என்று செல்லன் கூறுவதாக போலீசார் தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினத்தந்தி செய்தி!
Date: Wednesday, 10 Dec 2008 07:52
நான் பெங்களூர் போகும் போது எல்லாம் ஹொசூரைக் கடக்கும் போது “மூதறிஞர் ராஜாஜி பிறந்த இல்லம்” என்று எழுதப் பட்ட பெரிய வளைவைப்
பார்த்தவுடன் ஒரு முறையாவது நாம் போய் அவர் பிறந்த வீட்டைப் பார்க்க வேண்டும் என்று நினைப்பேன்.பேருந்தில் இருந்து இறங்கி நகரப்பேருந்திற்க்கு காத்திருந்து (எத்தனை மணிநேரத்துக்கொன்றோ) அதைப்பிடித்து போய்ப் பார்க்க
வேண்டிய அசெளகர்யத்தை நினைத்தவுடன் அந்த நினைப்பு மாறிவிடும்.
இந்த முறை பெங்களூரு சென்றது டூ வீலரில் என்பதால்,கட்டாயம் தொரப்பள்ளி செல்லவேண்டும் என்ற எண்ணம் உறுதியானது. அப்போது எடுத்த சில
படங்களைப் பதிவிடுகிறேன்.நேரம் கிடைத்தால் இந்த அனுபவத்தை எழுதுகிறேன்.
இன்று இராஜாஜி பிறந்த நாள்.
தொப்பூர் கணவாய் காலை வேளை
பாலக்காடு அல்ல! பாலக்கோடு
Date: Wednesday, 10 Dec 2008 01:20

இன்றல்லோ ராச சபைக்கு
ஏற்கு நாள் ---இன்றல்லோ
இறந்த நாள்;புன் கவிதை
பூ மடந்தை வாழ,
புவி மடந்தை வீற்றிருக்க
நாமடந்தை நூல் வாங்கும்
நாள்!
என்று ஒரு பாட்டு,கவிச்சக்ரவர்த்தி கம்பன் இறந்து பட்ட போது ஒரு கவிஞன் பாடியதாக வழங்கப் படுகிறது இந்தப் பாடல்.நண்பர் புதுமைப் பித்தன் இந்தப் பாடலை கம்பனேதான் பாடியிருக்கிறான் என்று சாதித்துக் கொண்டிருந்தார். சரசுவதியின் தாலிபாக்கியம் தறி பட்டுப் போயிற்று என்று கூற அவன் ஒருவனுக்குத்தான் அத்தனை தைரியமும்,துணிச்சலும்,கலைத் தேவியிடம் தோழமை உணர்ச்சியும் உண்டு என்பது அவர் வாதம்.
தனது கவிதையின் மேதாவிலாசம் உணரப்படாமல் போவதையும்,அதே வேளை வறட்டு வெள்ளைக் கவிகள் அம்பலமேறி அட்டகாசம் புரிவதையும் கம்பனும் அவன் ஆயுளிலேயே அனுபவித்தே இருப்பான்.அந்த வயிற்றெரிச்சல் காரணமாகவே அவனே இந்தப் பாட்டைப் பாடியிருக்கிறான் என்று அழுத்திச் சொன்னார் புதுமைப்பித்தன்.இதை வலியுறுத்துவது போல,இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருச்சி வானொலி நிலையத்தார் புதுமைப் பித்தனுக்கு ஒரு வானொலிப் பேச்சுக்கு அழைப்பு அனுப்பினார்கள்’பாட்டு எப்படி பிறக்கிறது?’ என்பது பொருள்.
புதுமைப்பித்தன் இந்த சந்தர்ப்பத்தைப் பயன் படுத்திக் கொண்டு அந்தப் பேச்சுக்காக எழுதிய எழுத்துப் பிரதியில் கம்பனைப் பற்றிய தமது அபிப்பிராயத்தைக் கூறி,வயிற்றெரிச்சலிலும் பாட்டு பிறக்க முடியும் என்று குறிப்பிட்டு இருந்தார்.அத்துடன் நில்லாமல்,கம்பனுக்கு ஏற்பட்டதைப் போல தன்னுடைய வயிற்றெரிச்ச்லையும் இப்படி ஒரு பாட்டாக அமைக்க முடியும் என்று குறிப்பிட்டு இருந்தார்.
திருச்சி ரேடியோ நிலையத்தில் பேசுவதற்காக இருந்த புதுமைப்பித்தன் அதற்கு முன்பே காலாவதியாகி விட்டால்?-- என்ற கேள்வியை அவரே எழுப்பிக்கொண்டு அப்போது தம் எதிரிகள் எத்தனை கும்மாளம் அடிப்பார்கள்,”பய போயித் தொலைஞ்சானா?” என்று எவ்வளவு நிம்மதியுடன் சொல்வார்கள்,புதுமைப் பித்தனின் மிதியடியின் காலடி ஓசையைக் காலனின் அடியோசையாகக் கேட்டுக் கிலியடைந்த இலக்கியப் போலிகள் எப்படி ஆனந்த பள்ளாட்டம் போடுவார்கள் என்பதையெல்லாம் கற்பித்துக் கொண்டு,அந்த வேளையில் புதுமைப் பித்தனின் நண்பர் ஒருவர் இந்த “நரியின் அம்பலக் கூத்தைக்’கண்டு வயிறெரிந்து,அந்த இலக்கியப் போலிகளைப் பார்த்துப் பாடுவதாக,புதுமைப் பித்தனே ஒரு பாட்டு பாடிவிட்டார்.
திருச்சிக்கு என்றான்;
தெந்திசைக்கே சென்று விட்டான்
கிரிச்சிச் சடாச் சத்தம்
கேட்டாயோ?-உரிச்சி
வச்ச ம்டையா வக்கு
அத்த மடையா| எச்சிற்
காசுமடையா போ
டா!
என்று பாட்டு.வயிற்றெரிச்சலின் காரணமாக வல்லின ஓசை செவிட்டில் அறைந்தாற் போல் உறைத்து விழுந்து,எதுகை மோனை இலக்கணங்கள் தட்டழிந்து தறிகெட்டுத் தாவுகின்றனவாம்!
இந்தப் பாட்டுக்கும் திருச்சிக்கும் ஏதோ தெய்வீக சம்பந்தம் உள்ள மாதிரி,புதுமைப் பித்தன் சந்தர்ப்ப பேதத்தால் திருச்சிக்குச் செல்ல முடியாமல் போய்விட்டது; அவருடைய பேச்சும் ஒலிபரப்பப் படாமல் நின்று விட்டது.
புதுமைப் பித்தன் கடைசிக் காலத்தில் திருச்சிக்குச் செல்லவில்லை,அதற்க்கும் தெற்கே திருவனந்தபுரத்துக்குத் தான் சென்றார்.ஆனால்,தமிழ்நாட்டின் சாபத்தீட்டு அவரை அதற்கும் தெற்கே-சென்றவர்கள் மீளாத தென் திசைக்கே--வழியனுப்பி விட்டது.ஆம் தமிழ்நாட்டு மறுமலர்ச்சியின் தனிக்காட்டு ராஜாவான புதுமைப் பித்தன் இந்த வருடம் 1948 வருஷம் ஜூன் மாசம் 31-ம் தேதியன்று காலமாகி விட்டார்.
சுமார் நான்கு தலைமுறைகளுக்கு முன் திருநெல்வேலி சரகத்தைச் சேர்ந்த உலகளந்த பெருமாள் பிள்ளை என்ற வேளாள குல ஆசாமி ஒருவர் தென்னாற்காடு ஜில்லாவிற்குச் சென்று அங்கு ஒரு கிராமத்தில் கர்ணம் உத்யோகம் பார்த்து வந்தார்.
அவர் அங்கு விருதாச்சலத்தில்,ஷதர் கோர்ட் கலெக்ட்டராக இருந்த வெள்ளைக் காரத் துரையிடம் நன் மதிப்பு பெற்று,பதவி உயர்வும் பெற்றார்.அச் சமயம் லகர ளகரம் நிறைந்து,வெள்ளைப் ப்ரங்கித் துரையின் வாயில் நுழையாத தம் பெயரை துரையவர்கள் உத்திரவுப் படி விருத்தாச்சலம் என்று மாற்றிக் கொண்டார்.இந்த விருத்தாச்சலம் பிள்ளையின் பேரனுக்குப் பேரன் தான் சொ.விருத்தாசலம் என்னும் புதுமைப்பித்தன்.
உலகளந்த பெருமாள் பிள்ளையிம் காலம் தொடங்கி,அவர்களின் வமிச பரம்பரை சர்க்கார் ரெவினியூ இலாகாவில் உத்தியோகம் விகித்து,ராஜ விசுவாசத்தோடு வாழ்ந்து வந்தனர்.புதுமைப் பித்தனின் தந்தையான ஸ்ரீ வி.சொக்கலிங்கம் பிள்ளை படித்து,பி.ஏ. பட்டம் பெற்று, ஸ்ரீமதி பர்வதம்மாளை வாழ்க்கைத் துணையாக ஏற்று, தென்னாற்காடு ஜில்லாவில் உத்தியோகம் பார்த்து வந்தார்.அப்போதுதான், 1906 ம் ஆண்டு கடலூருக்கருகில் உள்ள திருப்பாதிரிப் புலியூரில் புதுமைப்பித்தன் தாசில் சொக்கலிங்கம் பிள்ளையின் சீமாந்தப் புத்திரனாகப் பிறந்தார்.
தமிழ்நாட்டுச் சம்பிரதாயப்படி,புதுமைப் பித்தனுக்கு அவரது தாத்தா விருதாச்சலம் பிள்ளையின் பெயரே சூட்டப்பட்டது.ஸ்ரீ மதி பார்வதியம்மாள் புதுமைப் பித்தனுக்குப் பிறகு ருக்மணி என்ற செல்லத்தம்மாள் என்ற பெண் மகவை ஈன்றெடுத்து விட்டு 1914-ம் ஆண்டு தேக வியோகம் அடைந்து விட்டார்.அப்போது சொ.விருத்தாசலத்திற்கு வயது எட்டு; தாயின் பரிபூரணமான அன்பையும் பெற அவருக்குக் கொடுத்து வைக்க வில்லை.
தாசில் சொக்கலிங்கம் பிள்ளையின் உத்யோகத்தின் ஸ்தல மாற்றங்கள் காரணமாக ,புதுமைப்பித்தனின் பள்ளிப் படிப்பும் தேச சஞ்சாரம் செய்ய ஆரம்பித்தது.ஸ்திரமற்ற படிப்பால், சொ.விக்கு ஆரம்பக் கல்வி ஒழுங்காக நடைபெறவில்லை.அவருடைய ஆரம்பப் படிப்பு செஞ்சி, திண்டிவனம், கள்ளக்குறிச்சி முதலிய ஊர்களில் நடந்தேறியது.
“பள்ளிக் கூடத்தில் படிப்பதைவிட செஞ்சி மலைக் கோட்டையில் ஏறிச் சுற்றுவதுதான் எனக்கு பிடித்திருந்தது” என்று சொ.வியே குறிப்பிட்டார்.எனினும் பிறப்பால் அமைந்த புத்திக்கூர்மையால் பாடமும் படித்து வந்தார். ”பள்ளிக்கூடத்தில் படிக்கும் போதே பயல் கலிவெண்பாவை எடுத்து வைத்துக் கொண்டு பாராயணம் செய்வான்” என்று இன்றும் சொக்கலிங்கம் பிள்ளை பெருமையோடு சொல்லிக் கொள்கிறார்.
1918-ம் வருஷம் சொக்கலிங்கம் பிள்ளை பென்ஷன் பெற்று,தமது பூர்விக நாடாகிய தென்பாண்டிச் சீமைக்கு-திருநெல்வேலிக்கு வந்து குடியேறினார். அப்போதுதான் சொ.வி.க்கு பனிரெண்டு நிரம்பி,பால்யத்தின் பேதமை மறைந்து அறிவு தெளிந்து வரும் பருவம்.திருநெல்வேலியில் தான் அவருடைய பள்ளிப் படிப்பும் ஸ்திரமாயிற்று.தமிழ் மொழி பொருப்பிலே பிறந்தாலும்,தென்னன் புகழிலே வளர்ந்தது போல்,சொ.வி. திருப்பாதிரிப் புலியூரில் பிறந்தாலும்,அவரை ஆளாக்கி விட்டது தென்னன் புகழ் படைத்த திருநெல்வேலிச் சீமைதான்.
சொ.வி.யின் பள்ளிப் படிப்பு திருநெல்வேலி கிறிஷ்தவத் திருச்சபையைச் சார்ந்த அர்ச்.யோவான் ஸ்தாபனக் கல்விக் கூடத்தில் தான் நடந்தேறியது.பள்ளியில் அவர் ஒவ்வொரு வகுப்பிலும் பல தடவை குட்டிக்கரணம் போட்டே வந்திருக்கிறார்.பள்ளிப் படிப்பு இந்தப் புள்ளிக்கு உதவாமல் போய்விட்டாலும் அனுபவக் கல்வியும் அதிகமாகவே அமைந்து வந்தது.பள்ளிப்படிப்பு முடிந்து கல்லூரிப் படிப்புக்குத் தயாரானதும் சொ.வி.யின் கல்விக்கூடம் யோவான் கலாசாலையில் இருந்து இந்துக் க்ல்லூரிக்கு மாறியது.திருநெல்வேலி ஜங்கஷ்னில் உள்ள இந்தக் கல்லூரியில் தான் கவிஞர் பாரதியும் கல்வி கற்றார்.இந்தக் க்ல்லூரியில் தான் பாரதி உபாத்தியாரைப் பார்த்து “காள மேகம் ஆசிரியரின் உத்திரவுக்கு பணிந்து மழை பொழியாது” என்று வீராப்புடன் பதிலளித்தார்.
மற்றவை அடுத்த இடுகையில்:-
Date: Tuesday, 09 Dec 2008 06:50
புதுமைப்பித்தன் காலமாவதற்கு சில மாதங்களுக்கு முன் ஒரு நாள்.இருமல் வியாதியால் பீடிக்கப் பட்டிருந்த எழுத்தாளரும்,சந்திரபாபுவும் டாக்டர் வீட்டிலிருந்து திரும்பி வந்தார்கள்.
எழுத்தாளரின் வரவிற்காக ஒரு பத்திரிகாசிரியர் அவர் வீட்டில் காத்துக் கொண்டிருந்தார்.அவர் ஒரு இலக்கியப் பத்திரிக்கையின் ஆசிரியர்.
“அட்டை படமாகப் வெளியிட உங்கள் போட்டோ ஒன்று தேவை” என்று புதுமைப் பித்தனிடம் அவர் கேட்டார்.
புதுமைப்பித்தன் தமக்கே உரித்தான வரட்டுச் சிரிப்பை சிரித்துவிட்டு “என்னிடம் இப்போது ஒரே ஒரு போட்டோதான் இருக்கிறது.அதுவும் உங்களுக்குப் பயன்படாது!” என்றார்.
வந்தவர் விடுவதாக இல்லை. “பரவாயில்லை.அதையே கொடுங்கள்.நான் எதாவது செய்து சரிப்படுத்திக் கொள்கிறேன்.” என்றார்.
புதுமைப்பித்தன் மறுக்கவே வந்தவர் தருமாறு வற்புறித்தினார்.
“சரி, சொன்னால் கேட்க மாட்டீர்கள்.” என்றபடி ஒரு பெரிய கவரைப் பத்திரிகாசிரியரிடம் கொடுத்தார்.அதனுள் இருந்ததை வெளியே எடுத்துப் பார்த்தார் வந்தவர்.உடனே திரு திருவென்று விழித்தார்.
அது,புதுமைப் பித்தனின் நுரையீரலின் எக்ஸ்ரே படம்!
Date: Sunday, 07 Dec 2008 15:28

அன்றைய காட்சியில் சாமியாரின் காதலியாய் நடித்த வனஜா, ‘நீங்க இப்படியே போனீர்களானால் உங்களைப் பார்த்து ஜனங்களெல்லாம் உங்கள் காலில் விழுந்து கும்பிடுவார்கள்’ என்று பாராட்டினார்.
அதற்கு பாலையா,’ நன்றாய்ச் சொன்னீர்கள்!.என் மேல் விழுந்து எலும்பை எண்ணி விடுவார்கள்.கால்ம் மாறிவிட்டதம்மா!.போலிகள் பிழைக்க முடியாது என்றார்.
-------------------------------------------------------------------------------------------------
புத்தா பிச்சர்ஸ் படத்தில் நடிக்க வந்திருந்த டி.எஸ்.பாலையா வெற்றிலை போடவென வெளியே வந்த போது அருகில் இருந்த நண்பர் ஒருவரின் கையில் இருந்த தினசரியை வாங்கிப் பார்த்தார்.
அதில் நடிகர் சிவதாணு ஒரு திருடனைப் பிடித்துக் கொடுத்ததற்கு,போலீஸ் இலாகா அவருக்குச் சன்மானம், அளித்த செய்தி வெளி வந்து இருந்தது.
‘இந்தச் செய்தியைப் படித்ததும் எனக்குப் ப்ழைய சம்பவம் நினைவுக்கு வருகிறது’ எனக்கூறி அதைச் சொன்னார் பாலையா.
‘அப்போது அது அரிசி ரேஷன் இருந்த சமயம்.நான் நிறையப் படங்களில் போலீஸ்காரனாக நடித்து வந்த சீசன். சேலத்திலிருந்து திருச்சிக்குக் காரில் வந்து கொண்டிருந்தேன்.
‘இரவு நேரம்.கார் திம்மாச்சி புரம் அருகே வந்ததும்,ஆட்கள் பலர் தலையில் மூட்டையைச் சுமந்து பதுங்கி பதுங்கிப் போவதைப் பார்த்தேன்.எனக்குச் சந்தேகம் ஏற்ப்பட்டதும்,காரை நிறுத்தச் சொல்லி கீழே இறங்கினேன்.போலீஸ் உடுப்பு வேறு போட்டிருந்தேன்.மேக்கப்பைக் கலைக்காமல் அப்படியே வந்துக் கொண்டிருந்த்தேன்.என்னைக் கண்டத்தும் அவர்கள் மூட்டையைக் கீழேப் போட்டு விட்டு ஓடி விட்டார்கள்.அவ்வளவும் கறுப்புச் சந்தை வியாபாரத்துக்காக கடத்தப் படும் அரிசி! மூட்டைகள்.
‘கையில் இருந்த டார்ச் லைட்டைப் போட்டேன்.ஒரு பெரிய மரத்தின் மறைவில் கைகால்கள் தந்தி அடிக்க ஒருவன் நின்று கொண்டிருந்தான்.நான் அருகே போனதும்,ஐயா,இதை நீங்களே எடுத்துக்கிட்டுப் போங்க.என்னை விட்டுடுங்க’, என்று கெஞ்சினான்.
‘இனிமேல் இந்த மாதிரிச் செய்யாதீங்க ‘ என்று எச்சரித்து விட்டு போலீஸ் முறுக்கோடு மூட்டைகளை விட்டு விட்டு என பயணத்தை மேல தொடர்ந்தேன் என்று கூறினார் பாலையா!.
Date: Saturday, 06 Dec 2008 07:10
பி.வி.என். புரொடெக்ஷன்ஸ் தயாரித்து வரும் படத்திற்கு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வந்தார் குலதெய்வம் ராஜகோபால்.வந்த வேலை முடிந்தபின் தமாஷாகப் பேசிக்கொண்டிருந்தார்கள்.நடுவில் தாயாரிப்பாளர் வள்ளிநாயகம்”திரு என்.எஸ்.கிருஷ்ணனுடன் நீங்கள் வாழ்ந்த நாட்கள் பற்றிச் சொல்லுங்கள் என்றார்.
குலதெய்வம் ராஜகோபால் சொன்ன பல ரசமான விஷயங்களில் இதுவும் ஒன்று.
கலைவாணரும் நானும் பேசிக்கொண்டிருந்தோம்.அப்போது ஒருத்தி அங்கு வந்தாள்.”மவராசா! நிறைமாதக் கர்பிணி ஆஸ்பத்திரிக்கு போகணும் ,உதவுங்கள் “என்று கேட்டாள்.
கலைவாணரோ அவளை மேலும் கீழும் அலட்சியமாகப் பார்த்தார்.அவள் துடித்த துடிப்பையும்,கிருஷ்ணன் அவர்களின் அலட்சியத்தையும் கண்டு எனக்குக் கோபம் கோபமாக வந்தது.கஷ்டம் என்று வருபவர்களுக்கு அள்ளி வழங்கும் கலைவாணர் இந்தக் கர்பிணி விஷயத்தில் ஏன் இப்படி நடந்துக் கொள்கிறார்? என்று நான் அவசரப் பட்டேன்.
அவரோ சிறிது கூடப் பதட்டம் காட்டவில்லை.நான்கணா நாணயம் ஒன்றை ஒரு பக்கம் வைத்தார்.ஐந்து ரூபாய் நோட்டென்றை மற்றொரு பக்கம் வைத்தார். ”இந்தாம்மா,நீ நிஜமாகவே கர்பிணியாக இருந்தா இந்த நாலணாவை எடுத்துக்க,வேஷம் போடறவளா இருந்தா ஐந்து ரூபாயை எடுத்துக்க” என்று சொன்னார்.
அந்தப் பெண்ணோ,”சாமி,நீங்க இப்படிச் சோதிக்கலாமுங்களா?” என்று சொன்னாளேத் தவிர எதையும் தொடவில்லை.அவளது பார்வை மட்டும் ஐந்து ரூபாய் நோட்டின் மேலேயே பதிந்திருந்தது.
கொஞ்ச நேரத்துக் பின் தான் எனக்கு எல்லாமே விளங்கியது.அவள் இடுப்பில் சுற்றிக் கொண்டிருந்த கந்தைகளை ஒவ்வொன்றாகக் களைந்தப் பிறகுதான் அவள் ஏமாற்று வேஷம் போட்டு இருக்கிறாள் என்பது தெரிந்தது.
கலைவாணர் அவளிடம் ஐந்து ரூபாயைக் கொடுத்து”இன்றோடு இந்த வேலைக்கு முழுக்குப் போட்டு விடு “,என்று சொல்லி அனுப்பினார்.
நான் என்னுடைய அவசர முடிவுக்காக வருந்தினாலும்,”அந்த ஏமாற்றுப் பேர்வழிக்கு ஏன் ஐந்து ரூபாய் கொடுத்தீர்கள்?” என்று கோபமாய் கேட்டேன்.
“அட அசட்டுப் பயலே! நான் ஏமாந்துபோய்க் கொடுத்திருந்தால் நீ கோபிக்கலாம்.நான் அவள் “நடிப்பு”க்காக அல்லவா சன்மானம் கொடுத்தேன் என்றார் என்.எஸ்.கே.
Date: Thursday, 04 Dec 2008 07:05
இது ஏற்கனவே போட்ட பதிவுதான்.ஆனால் மீள் பதிவல்ல.வழக்கம் போல் காப்பி பதிவு.இப்போ மும்பையில் தீவிரவாதிகளின் தாக்குதலுக்குப் பிறகு இதைப் போடணும்னு தோணிச்சு.செப்டம்பரில் எழுதியது
இந்த கட்டுரையின் முடிவில் ”அடுத்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்குப் பிறகு இந்தக் கட்டுரையை மீண்டும் படிக்கலாம்” அப்படின்னு எழுதியிருந்தேன்.யாரும் தேடிப் படிக்கப் போறதில்லை.அதனால் நமக்கு நாமே திட்டத்தின் படி நானே திரும்பவும் போட்டு விட்டேன்.
மறுபடியும் மற்றொரு குண்டு வெடிப்பு சம்பவம் டெல்லியில் நிகழ்ந்து விட்டது.இருபத்திஐந்து பேர் பலியாயினர்.வழக்கம் போல் உள்துறை அமைச்சர் தீவிரவாதிகளை ஒடுக்கியே தீருவோம் என்று ஒரு அறிக்கை விட்டார்.
ஜனங்கள் ஒற்றுமையாக இதை எதிர்கொள்ள வேண்டும் என்று பிரதமர் வழக்கம் போல் விடும் அறிக்கையைக் கூட விடவில்லை.அவருக்கே சலிப்பாகி விட்டதா அல்லது அந்த அறிக்கை காமெடியாகத் தெரியும் என்பதால் விடவில்லையா? என்று தெரியவில்லை.
வழக்கம் போல குண்டு வெடித்த இடத்தையும்,பிறகு மருத்துவமனைக்கும் சென்று வழக்கம் போல அடிபட்டவர்களைப் பார்த்து வழக்கம் போல போட்டோவிற்கு 'போஸ்' கொடுத்து விட்டு வீடு திரும்பி இருப்பார்கள் சோனியா,உள்பட அரசியல் பிரமுகர்கள்.
வழக்கம் போல் இரண்டு நாட்களுக்கு போலீசார்கள் தீவிர கண்காணிப்பில் இருப்பார்கள்.இரண்டு நாட்கள் பேருந்து நிலையம்,ரயில்வே நிலையம் போன்ற இடங்களில் அவர்களுடைய தலைகள் அதிகமாகத் தென்படும். வழக்கம் அந்த சோதனையிடும் போட்டோக்கள் பத்திரிக்கைகளில் அமர்களப் படும்.
வழக்கம் போல் முஸ்லீம் சம்மந்தப்பட்ட ஆனால் மதசார்பற்ற(!) கட்சிகளின் தலைவர் ஒருவர் இதை இஸ்லாமியத் தீவிரவாதம் என்று சொல்லக்கூடாது, இது,இந்துத்வா சக்திகளின் வெறிச்செயலாக இருக்கும். அவர்கள் திசை திருப்புவதற்க்காக செய்த நாடகம். மஹாராஷ்ட்ராவில் மசூதியில் நடந்ததை மறக்கக் கூடாது என்பார்.
வழக்கம் போல் பொடா,தடா போன்ற சட்டங்களைக் கொண்டு வரவேண்டும். தீவிரவாதிகளைக் கண்டிக்க கடுமையான சட்டங்கள் வேண்டும் என்று ப.ஜ.க தலைவர்கள் கத்துவார்கள். வழக்கம் போல் பகுத்தறிவு சிங்கங்கள் அதெல்லாம் கூடாது,இருக்கிற சட்டங்களே போதும்.முஸ்லீம்களின் மனது புண்படும் என்று இவரே முஸ்லீம்கள் அனைவரையும் தீவிரவாதியாக்கி அவர்களது ஓட்டுகளுக்கு 'ரிசர்வ்' செய்து கொள்வார்.
வழக்கம் போல் காங்கிரஸ் தன் பங்குக்கு, பொடா இருந்த போதுதானே பாரளுமன்றத் தாக்குதல் நடந்தது. எனவே சட்டங்களால் எந்த பிரயோசனமும் இல்லை. இருக்கிற சட்டமே போதும். என்று தன் பங்கு முஸ்லீம்களின் ஓட்டுக்கு, அறிக்கை விடும்.
இந்த சமயத்தில் மட்டும் பாரளுமன்றத் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளைத் தம் அரசு தூக்கிலிடாத,அந்தச் சாதனையை மறைக்கும்.
தேர்தல் சமயத்தில் அதைச் சொல்வார்கள் முஸ்லீம்களின் ஓட்டு வேண்டுமே?.
வழக்கம் போல் ஜூ.வி,ரிப்போர்ட்டர்,நக்கீரன் போன்ற பத்திரிக்கைகள் பல ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் இரத்தம் சொட்டசொட்ட வெளியிடுவார்கள்.
அடுத்த தாக்குதல்களுக்கு ஆளாகப் போகும் நகரங்களைப் பட்டியலிட்டு அந்த நகரவாசிகளைத் தூங்கவிடாமல் செய்வார்கள்.
நாமும் வழக்கம் போல் குண்டு வெடிப்பு சம்பங்களைப் பற்றிய இரவுச் செய்திகளைப் பார்த்துவிட்டு 'மானாட மயிலாட' பார்க்கலாம்.
பி.கு.:அடுத்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்குப் பிறகு இந்தக் கட்டுரையை மீண்டும் படிக்கலாம்.
» © All content and copyrights belong to their respective authors.«
» © FeedShow - Online RSS Feeds Reader







